மின் வாரியத்தில் வெளியாகும் செய்திகள் உடனுக்குடன்

Friday, March 22, 2013

தமிழ்நாடு மின்சார வாரியம் பற்றிய வரலாறு




தமிழ்நாடு மின்சார வாரியம் பற்றிய வரலாறு


                தமிழ்நாடு மின்சார வாரியம் பற்றிய வரலாறு



  
தமிழ் நாட்டில் 1908ஆம் வருடம் வரை சிறிய புனல் மின் நிலையங்களாக ஆங்காங்கே உள்ள தேயிலை தோட்டங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.  மேலும் ஓரு¢சிறிய புனல் மின் நிலையம் குன்னூர் அருகே உள்ள காட்டேரி என்னுமிடத்தில் இயங்கி வந்தது. இது அரசு மின்துறையாக 1927ஆம் ஆண்டு மாற்றப்பட்டது.

          ஆங்கிலேய பொறியாளர்  திரு. ஜான்.ஜி.ஹென்றி  ஹோவார்டு அவர்களால், 70 மெகாவாட் திறன் கொண்ட பைகாரா நீர் உற்பத்தி நிலையம் 1933-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.  மேலும் மெட்ராஸ் மாநில மின்துறை தலைவராக மின் பொறியாளர் நியமிக்கப்பட்டார்.

           மின்சார சட்டம் 1948ன் கீழ் உருவாக்கப்பட ஜீலை 1ஆம் தேதி முதல் மெட்ராஸ் மாநில மின்சார வாரியம் என்ற பெயருடன் செயல்படத் துவங்கியது. அதற்கு தலைமை பொறியாளர் மின்னியல் பத்ம ஸ்ரீ வி.பி. அப்பாதுரை அவர்கள் நியமிக்கப்பட்டார். எணணூரில் 60 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் உற்பத்தி நிலையம் 1971ஆம் வருடம் நிறுவப்பட்டது.
           இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடியிலும், மேட்டூரிலும் மற்றும் வட சென்னையிலும் அனல் மின்நிலையங்களும் மற்றும் குந்தா, பெரியாறு, சுருளியாறு, காடம்பாறை, கோதையார், ஆலியார், மேட்டுர் போன்ற புனல் மின் நிலையங்களும் ஆரம்பிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு மின்சார வாரியத்தால் 1986 முதல் 1993ல் 19,355 மெகா வாட் திறன் கொண்ட காற்றாலைகள் நிறுவப்பட்டது.
  
           நாப்தா என்ற எரிவாயுவைக் கொண்டு 10 மெகா வாட் திறன் கொண்ட வாயு நிலையம் நரிமணம் பகுதியில் 1991-1992இல் நிறுவப்பட்டது.  பொதுத்துறை  மின்     உற்பத்தியில், தனியார் மின் உற்பத்தியாளர்களும் கலந்து கொள்ளலாம் என்பதன் பேரில், ஜி.எம். ஆர். வாசவி என்ற தனியார் நிறுவனத்தால் முதன்முதலில் பேசின் பிரிட்ஜ் பகுதியில் 1992ல் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.
          தமிழ்நாடு மின்சார வாரியம் 10,237 மெகாவாட் திறன் கொண்ட சுமார் 2.23 கோடி மின்நுகர்வோர்களுக்கு மின் விநியோகம் செய்யும் அளவுக்கு மிக பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.                                                                             
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பற்றிய விபரம்   

விதிமுறைகளுக்கு உட்பட்ட அமைப்பாக மின் வழங்கல் சட்டம் 1948ன் கீழ் 01.07.1957ல் உருவாக்கப்பட்டது. இது முந்தைய சென்னை அரசாங்கத்தில் இருந்த, மின்சாரத் துறையின் அடுத்த கால்வழி ஆகும். தமிழ்நாடு மின்சார வாரியம் 53 ஆண்டுகளின் பயணத்திற்கு பின்னர் 01/11/2010 அன்று தமிழக அரசு தமிழ்நாடு மின்சார வாரியத்தை மறுசீரமைப்பு செய்வதற்கு கொள்கை ரீதியான ஒப்புதலை அரசு ஆணை எண் 114 நாள் 08/10/2008 ல் வழங்கியுள்ளது. அதன்படி தமிழ்நாடு மின்சார வாரியமானது த,.நா.மி.வா. நிறுவனம் தலைமையில் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அரசு நிறுவனங்களாக பிரிக்கப்பட்டது.

 அரசின் இலட்சியம்  
மைய அரசு 2012க்குள் அனைவருக்கும் மின்சாரம் என்ற கோட்பாட்டை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. இதனை நிறைவேற்றும் பொருட்டு, தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு மின்சார வாரியம் மின்உற்பத்தி மின் அனுப்புகை மற்றும் பகிர்மான கூட்டமைப்புகளில் சிறந்த முன்னேற்றத்தை அடைந்து கொண்டிருக்கிறது. அரசின் இலட்சியத்தின் மற்றொரு பகுதியாக தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழகத்தில் உள்ளஅனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களில் மின் விநியோகத்தை நிறைவேற்றியுள்ளது. அதே சமயம் அனைத்து குடியிருப்புகளுக்கும் மின் இணைப்பு வழங்குவதிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது.

  
மின் உற்பத்தி :                      
தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நிறுவப்பட்ட மொத்த மின் நிறுவு திறன் 10,214 மெகாவாட்டாகும். இது மாநில, மத்திய மற்றும் தனியார் நிறுவனங்களின் மூலம் நிறுவப்பட்டவையாகும்.  மேலும், மரபுசாரா எரிசக்தியான  காற்றாலையின் நிறுவு திறன் சுமார் 6548 மெகாவாட்டாகும்.   மேலும்..   


மின் பகிர்மானம்

மின் உற்பத்தி மற்றும் அனுப்புகையைக் காட்டிலும் தரமான தங்கு தடையற்ற மின் பகிர்மான கட்டமைப்பு மிகவும் அவசியமானதொன்றாகும்.  தமிழகத்தில் மின்பகிர்மான வளர்ச்சி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வளர்ச்சியாகும்  மேலும்..   



மின்சார வாரியத்தை சீரமைத்தல் 
தமிழக அரசு தமிழ்நாடு மின்சார வாரியத்தை மறுசீரமைப்பு செய்வதற்கு 


மின்சார வாரியத்தை சீரமைத்தல்  

தமிழக அரசு தமிழ்நாடு மின்சார வாரியத்தை மறுசீரமைப்பு செய்வதற்கு கொள்கை ரீதியான ஒப்புதலை அரசு ஆணை எண்  114 நாள் 08.10.2008ல் வழங்கியுள்ளது. அதன்படி தமிழ்நாடு மின்சார வாரியமானது கீழ்க்கண்ட மூன்று அரசு நிறுவனங்களாக பிரிக்கப்படும்.


1. த.நா.மி.வா. நிறுவனம் (TNEB Ltd.,)
2. தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் (Tamil Nadu Transmission Corporation Ltd.,)
3. தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tamil Nadu Generation and Distribution Corporation Ltd.,)

1. தமிழக அரசு மேலும் செயலாக்க குழு (Steering Committee) ஒன்றை மாறுதல் திட்டம் (Transfer Scheme)மின்சார சட்டம் 2003ன் படி இறுதி செய்வதற்காக அமைத்துள்ளது.

2.  செயலாக்கக்குழு பரிந்துரைத்ததின் பேரில் மாற்றுதல்  மறுசீரமைப்பு பணிகளுக்காக பீட்பேக் வென்ட்சர்ஸ் (Feedback Ventures)என்ற கன்சல்டன்ஸி நிறுவனத்திற்கு பணி ஆணை 02.04.2009 ல் வழங்கப்பட்டுள்ளது.

3.  அரசாணை எண் 38 நாள் 21.05.2009 ல் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் பதிவு செய்வதற்குண்டான (Tamil Nadu Transmission Corporation Ltd.,) அனுமதியை தமிழக அரசு வழங்கியது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் (Tamil Nadu Transmission Corporation Ltd.,) 15.06.2009 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

4. தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் (Tamil Nadu Transmission Corporation Ltd.,)   பணித்துவக்க சான்றிதழ் 11.12.2009 அன்று பெறப்பட்டு மாண்புமிகு தமிழக முதல்வரால் 14.12.2009 அன்று துவக்கிவைக்கப்பட்டுள்ளது.  இந்த நிறுவனத்தின் இயக்குநர்களை பணி நியமனம் செய்வதற்கான ஆணையை தமிழக அரசு 11.12.2009 அன்று வழங்கியது.இதன் அடிப்படையில் தலைவர், இயக்குநர், இயக்குநர் - மின் தொடரமைப்பு திட்டங்கள், இயக்குநர் - நிதி அவர்கள் 14.12.2009 அன்று பணியேற்றனர்.  இயக்குநர் இயக்கம் 05.04.2010 அன்று பணி நியமனம் செய்யப்பட்டு 08.04.2010 அன்று பணியேற்றார்.

5. அரசாணை எண் 94 நாள் 16.11.2009 ல் தமிழ்நாடு அரசு, த.நா.மி.வா. நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tamil Nadu Generation and Distribution Corporation Ltd.,) ஆகியவற்றை பதிவு செய்ய அனுமதி வழங்கியது.  மேற்கண்ட இரண்டு நிறுவனங்களும் 01.12.2009 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களுக்கான பணி துவக்க சான்றிதழ்கள் முறையே 12.03.2010 மற்றும் 16.03.2010 அன்று பெறப்பட்டுள்ளது.  இந்நிறுவனங்களுக்கான இயக்குநர்கள் பணி நியமனம் செய்வதற்கான ஆணையை தமிழக அரசு 05.04.2010 அன்று வழங்கியது.  இதன் அடிப்படையில் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், இயக்குநர்-திட்டங்கள் இயக்குநர்-மின் உற்பத்தி இயக்குநர்-நிதி அவர்கள் 08.04.2010 அன்று பணியேற்றனர்.

6. வரைவு மாறுதல் திட்டம் தயார் செய்யப்பட்டு தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மின்சாரம் பற்றிய வரலாறு


மின்சார சோதனைகள் 1771 ம் வருடம் ஒரு புது திருப்பு முனை அடைந்தன . லுய்கி கால்வானி என்ற இத்தாலிய உயிரியல் ஆராய்ச்சியாளர் லேடன் குடுவைகளுடன் ஆராய்ச்சி செய்து வந்தார். அவர் உயிரியல் ஆராய்ச்சியில் சில தவளை கால்களுடனும் ஆராய்ச்சி செய்து வந்தார். இவைகளுக்கும் மின்சாரத்துக்கும் ஏதும் தொடர்பு இல்லை. என்ன நடந்தது ? லேடன் குடுவையிலிருந்து ஒரு மின்பொறி ஒரு தவளை காலை தாக்கியது. தாக்கியதும் அந்த தவளை கால் துடித்தது. கால்வானி ஆச்சரியப்பட்டார். உயிருள்ள தசைகள் மட்டுமே இவ்வாறு துடிக்கும். மின்பொறி உயிரற்ற தசைகள் உயிருள்ளது போல் நடக்க வைத்தது. மின்சாரத்துக்கும் உயிருக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா ? மின்னல் ஒரு பெரிய மின்சார பொறி என்று ப்ராங்கலின் சோதனையிலிருந்து கால்வானி அறிந்திருந்தார். இடி, மின்னல் போது சில தவளை கால்களை ஜன்னலுக்கு வெளியே வைத்தால் என்ன நடக்கும் ? இடி, மின்னல், மின்சாரம், காற்றிலும், பூமியிலும் பரவும் போது உயிரில்லா தசை துடிக்குமா ? சில தவளை கால்களை ஒரு பித்தளை கொக்கியில் மாட்டி வெளியில் வைத்தார். அதை ஒரு இரும்பு சட்டத்தின் மேல் வைத்தார் இடி, மின்னல் போது அந்த உயிரில்லா தவளை கால்கள் துடித்தன. சில நேரம் தொடர்ந்து துடித்தன. இடி, மின்னல் இல்லாத சமயத்தில் வானிலை அமைதியாக இருந்த போது மறுபடியும் சோதனை செய்தார். இடி, மின்னல் இல்லாவிட்டாலும் தவளை கால்கள் துடித்தன. வேறு விதமான இரண்டு உலோகங்களுடன் அவைகள் தொடர்பு கொண்டால் அவை துடித்தன. பித்தளை, இரும்பு, போன்ற வெவ்வேறு உலோகங்கள் தொடர்பு ஒரே சமயத்தில் இதை செய்தன. மின்சாரத்துக்கும், உயிருக்கும் ஒரு தொடர்பு இருக்க வேண்டும் என்று கால்வானி தீர்மானித்தார் உயிருள்ளவைகள் மின்சாரம் நிரம்பியவையாக இருக்கின்றன. இந்த உயிருள்ளவைகளின் மின்சாரம் உயிர் போன உடனே எல்லாமே போய்விடுவதில்லை. அதனால் உயிர் போன பிறகும் வெவ்வேறு உலோகங்கள் தொட்டால் தசைகள் துடிக்கின்றன. அலஸந்தோரோ வோல்டா என்ற மற்றொரு இத்தாலிய விஞ்ஞானி இந்த தசை துடிப்பை பற்றி சிந்தித்தார். மின்சாரத்தில் பல சோதனைகளை அவர் செய்திருந்தார். தசைகளில் மின்சாரம் என்பதை அவர் நம்பவில்லை. இரு வெவ்வேறு உலோகங்கள் தொட்டபோது மின்சாரம் உலோகத்தின் மூலம் வந்தது தசைகளிலிருந்து வரவில்லை என்று எண்ணினார். இது சரியென்றால் மின்சாரம் இரு வெவ்வேறு உலோகம் கொண்டு செய்ய முடியும். தசைகள் தேவையில்லை. இரு வெவ்வேறு உலோகங்களிடையே தசைக்கு பதிலாக ஒரு ஈரமான அட்டை வைத்தால் என்ன நடக்கும் ? 1794 ம் வருடம் வோல்டா மின்சாரத்தை உரசல், தசைகள் இன்றி உற்பத்திசெய்ய முடியும் என்று நிரூபித்தார். இரு வெவ்வேறு உலோக தகடுகளை உப்பு தண்ணீரில் வைத்தால் உப்பு தண்ணீர் ஒரு எளிதில் கடத்தி என்பதால் அவை ரசாயன மாற்றம் அடைந்துவிடும். இந்த ரசாயன மாற்றம் மின்சாரத்தை எப்படியோ உட்கொண்ட மாற்றம் ஒரு உலோக தகடு பாஸிடிவ் மின்சாரத்தையும் மற்ற தகடு நெகடிவ் மின்சாரத்தையும் பெறும். இதை பெரிய அளவில் செய்ய வோல்டா விரும்பினார். 1800 ம் வருடம் அதிக எண்ணிக்கை உப்பு கலங்களை அவர் தயாரித்தார். ஒரு செம்பு கம்பியை வளைத்து ஒரு கலத்தையும் மறு கலத்தையும் இணைக்கும் வகையில் செய்து அடுத்த கலத்தை ஒரு வெள்ளீய தகடால் இணைத்தார். எல்லா உப்பு நீர் கலங்களும் மாறி இவ்வாறு மாற்றி மாற்றி செப்பு கம்பியினால் வெள்ளீயம் கம்பிகளால் இணைக்கப்பட்டன. எல்லா செப்பு கம்பிகள் பாஸிடிவ் (நேர்மறை மின்சாரத்தையும்) எல்லா வெள்ளீய கம்பிகள் நெகடிவ் (எதிர்மறை மின்சாரத்தையும்) பெற்றன. இந்த கம்பிகளின் மின்சாரம் ஒன்றோடு ஒன்று சேர்ந்து அதிக அளவு மின்சாரமாய் ஆயின. அதாவது ஒரு குடுவை மின்சாரத்தை விட பல மடங்கு அதிக மின்சாரம் அங்கு உற்பத்தி ஆகியது. கடைசியாக வோல்டா ஒரு முனை வெள்ளீய தகடையும் ஒரு முனை செப்பு தகடையும் இன்னொரு உலோக கம்பியால் இணைத்தார். ஒரு முனையிலிருந்து குறைவான மின்சாரம் உள்ள மறு முனைக்கு உலோக கம்பி வழியாக மின்சாரம் சென்றது. வெள்ளீயம், செப்பு இவைகள் உப்பு தண்ணீரில் ரசாயன மாற்றம் அடைவது தொடர்ந்தது. இதனால் இந்த ரசாயன மாற்றம் நிகழும் வரை மின்சாரம் ஒரு முனை பாஸிடிவ் பக்கத்தில் இருந்து மறு முனை நெகடிவ் பக்கத்துக்கு சென்று கொண்டே இருந்தது. ஒரே மாதிரி பல பொருட்கள் வரிசையை ஆங்கிலத்தில் “பேட்டரி” என்பார்கள் வோல்டா வரிசையாக பல உப்பு நீர் கலங்களையும் வெள்ளீய செப்பு தகடுகளையும் வைத்து மின்சாரம் செய்ததை அதனால் “மின்சார பேட்டரி” என்று பெயரிட்டார். வோல்டா முதல் பேட்டரியை கண்டுபிடித்தவர் ஆனார். வோல்டா காலத்துக்குமுன் மின்சாரம் தங்கிய மின்சாரமாகதான் இருந்தது. நிலையான மின்சாரம் வோல்டாவின் பேட்டரியின் மின்சாரம் பாயும், செல்லும் மின்சாரமாக உற்பத்தி ஆகியது. வெகு நேரம் கம்பியில் ஒடியது. இதை “மின்சார கரண்ட்” (மின் ஒட்டம்) என்று பெயரிட்டனர். உடனே இந்த மின் ஒட்டத்தை பல சோதனைகளில் ஈடுபடுத்தினார்கள். புது வகையிலும் சிறப்பாக செயல்படும் பேட்டரிகள் தயாரிக்கப்பட்டன. ரசாயன மாற்றம் மின்சாரம் உற்பத்தி செய்யும் அதே வகையில் மின்சாரம் ரசாயன மாற்றத்தையும் செய்ய முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டது. வோல்டா பேட்டரி செய்த அதே 1800 ம் வருடம் வில்லியம் நிக்கல்ஸன் என்ற ஆங்கிலேயர் மின்சாரத்தை உபயோகித்து தண்ணீரை ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் வாயுக்களாக பிரித்தார். தண்ணீர் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் இவைகளின் ரசாயன கலவை என்று தெரியவந்தது. 1807 ம் வருடம் ஹம்பரி டேவி மின்சார ஒட்டத்தை உபயோகித்து சில பெருங்கற்களை உடைத்தார். அதிலிருந்து அதுவரை தெரியாத புது உலோகங்கள் அறியப்பட்டன. 1819 ம் வருடம் டென்மார்க் விஞ்ஞானி ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆர்ஸ்டெட் மின்சாரம் பாயும் கம்பி காந்த தன்மையை அடைகிறது என்று கண்டுபிடித்தார். மின்சாரமும் காந்த சக்தியும் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தப்பட்டிருந்தன. உடனே ஆராய்ச்சியாளர்கள் இதை ஆராய ஆரம்பித்தனர் 1829 ம் வருடம் அமெரிக்க விஞ்ஞானி ஜோஸப் ஹென்றி மின்சாரம் பாயும் கம்பியை சுருள் சுருளாக சுற்றினால் காந்த சக்தி வெகு அதிகமாக வெளிப்படுகிறது என்று கண்டுபிடித்தார். சுருளின் ஒவ்வொரு கம்பியும் அடுத்த சுருளின் மின்சக்தி காந்த சக்தியை அதிகரித்தது. ஆனால் மின்சாரம் ஒரு சுருளில் இருந்து மற்றொரு சுருளுக்கு தாவுவதை தடுக்க சுருள்களை பட்டுநூல் கொண்டு சுற்ற வேண்டும். இவ்வாறு செய்தால் மின்சாரம் சுருள் கம்பியின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைவரை கம்பி வழியாகவே செல்லும். கம்பி சுருள்களை ஒரு இரும்பின் மேல் சுற்றினால் காந்த சக்தி மேலும் அதிகரித்தது. சாதாரண காந்தங்களை விட வெகு வலுவானதாக அது விளங்கியது. இந்த ‘மின்காந்தம்’ காந்த சக்தியை பெறவும், இழக்கவும் வெகு சுலபமாக பேட்டரியிலிருந்து வந்த கம்பியை இணைப்பதும் கழட்டிவிடுவதுமே போதும். இணைத்தால் காந்த சக்தி வந்தது. இணைப்பை நீக்கினால் காந்த சக்தி போய்விட்டது. இதை உபயோகித்து ஹென்றி ஒரு டன் எடை இரும்பை ஒரு சிறிய மின் காந்தச் சுருளை கொண்டு தூக்கி காண்பித்தார். அந்த இரும்பை எங்கு வேண்டுமோ அங்கே எடுத்து நகர்த்தி வைக்க முடியும். மைக்கல் பாரடே என்ற ஆங்கில விஞ்ஞானி மின்சாரம் காந்த சக்தியை ஏற்படுத்தியது மாதிரியே காந்த சக்தியும் மின்சாரத்தை செய்ய முடியும் என்று காண்பித்தார். ஒரு காந்த தகடு அருகே ஒரு செப்பு தகடை சுற்றி சுற்றி வரச்செய்தால் செப்பில் மின்சாரம் வந்தது. இந்த செப்பு தகடை தொடர்ந்து சுற்றுவதற்கு ஒரு நீராவி என்ஜின் உபயோகித்தால் நீராவி என்ஜின் ஒடும் வரை செப்பு தகடு மின்சாரம் உற்பத்தி செய்யும் பாரடே இந்த முறையில் மின்சாரம் உற்பத்தி செய்தார். மின்சார உற்பத்தி இயந்திரம் அல்லது மின்சார ஜெனரேட்டர். என்று அது பெயரிடப்பட்டது. பேட்டரிக்கு வெள்ளீயம், செப்பு, துத்தநாகம் என்ற உலோகங்கள் தேவைப்பட்டன. அவைகள் ரசாயன மாற்றத்தில் கரைந்தன. ஆனால் மின்சார ஜெனரேட்டர் நிலக்கரி கொண்டு வெப்பம் தயாரித்து நீராவி என்ஜின் மட்டும் ஓட்டினால் போதும் என்ற முறையில் விலை குறைந்த மின்சாரம் கொடுத்தது. பாரடே கண்டுபிடிப்பு மூலம் விலை குறைந்த மின்சாரம் தயாரித்து மக்கள் உபயோகிப்பது சாத்தியம் ஆயிற்று. அதே வருடம் ஜோஸப் ஹென்றி பாரடேயின் கண்டுபிடிப்பை திரும்பி உபயோகித்தார் அதாவது மின்சாரம் செப்பு தகடு சுற்றுவதனால் உற்பத்தியினால் மின்சாரம் ஒரு தகடு அல்லது சக்கரத்தை சுற்ற முடியும் என்று காண்பித்தார். மின்சாரம் ஒரு சக்கரத்தை சுற்ற முடியும் என்று கண்டுப்பிடிக்கப்பட்டது. மின்சார மோட்டர் என்று அழைக்கப்பட்டது. மின்சார மோட்டரை ஒரு நொடியில் ஓடச் செய்யவும் ஒரு நொடியில் நிற்கச் செய்யவும் முடிந்தது. சிறிய மின்சார மோட்டர்கள் சிறு பொருள்களையும் நகர்த்த உதவியது. அதை தொடர்சியாகச் செய்யவும் முடிந்தது. அதுவரை மிருகங்கள், மனிதர்களின் தசைகளை உபயோகித்து செய்த வேலைகளை மின்சாரத்தால் செய்ய முடியும் என்று அறியப்பட்டது. கண்டுப்பிடிப்பாளர்கள் மின்சாரத்தை உபயோகித்து ஆச்சரியமான செயல்களை செய்ய முடிந்தனர். சாமுவேல் மோர்ஸ் என்ற அமெரிக்க கண்டுப்பிடிப்பாளர் 1844 வது வருடம், டெலிகிராப் என்ற கருவியை முதன் முதலில் செய்தார். மின்சாரத்தை ஒரு நீளமான கம்பியில் செலுத்தியும் நிறுத்தியும் சிறிதாகவும் பெரிதாகவும் புள்ளி- கோடு என்ற முறையில் அனுப்பினார். ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்கும் வெவ்வேறு புள்ளி கோடுகளை கொடுத்தார். எந்த மோர்ஸ் 'சங்கேத தொகுப்பு' செய்திகளை வெகு தொலைவு இடங்களுக்கு மின்வேகத்தில் செலுத்த உதவியது. அதாவது ஒரு நொடியில் 3,00,000 கிலோமீட்டர் வேகத்தில் டெலிகிராப் செய்தி நியூயார்க் நகரில் இருந்து சான்பிரான்சிஸ்கோ நகருக்கு 1/60 நொடியில் சென்றது. 1876 வருடம் இன்னொரு ஸ்காட்லந்து அமெரிக்க கண்டுப்பிடிப்பாளர் அலெக்ஸாந்தர் கிரகாம்பெல் மின்சாரப் பாய்ச்சல் குறைவுச் சக்தியாகவும் மிக சக்தியாகவும் மாற்றுவதன் மூலம் ஒலி அலைகளை உண்டாக்கினார். டெலிப்போன் இப்படித் தான் கண்டுப்பிடிக்கப்பட்டது. 1879 வருடம் தாமஸ் ஆல்வா எடிஸன் என்று அமெரிக்க கண்டுப்பிடிப்பாளர் ஒரு வெற்று கண்ணாடிக் குடுவையில் ஒரு கார்பன் இழையில் மின்சாரத்தை செலுத்தி அதை ஜொலிக்க செய்தார். மின்சாரம் அந்த கார்பன் இழையை சூடேற்றி வெண்மையாக பிரகாசிக்கும் நிலைக்கு கொண்டுவந்தார். காற்று இல்லாத குடுவை என்பதால், அந்த இழை பிரகாசித்துக்கொண்டே இருந்தது.கடந்த நூற்றாண்டின்  தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மின்சாரம் மக்கள் மத்தியிலும் பெரும் வற்வேற்பு கிடைத்தது.  இந்த நிலையில் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயே அரசானது மின்சார உற்பத்தி, அதனைக் கொண்டு செல்லுதல் மற்றும் வழங்குதல் குறித்து ஒரு சட்டத்தை இயற்றியது. 


1910 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட அந்த சட்டம் பின்னாளில் இந்திய மின்சாரச் சட்டம் 1910 என்று அழைக்கப்படுகின்றது.

சுதந்திர இந்தியாவின் அரசானது, மின்சாரம் அனைத்துத் தரப்பு மக்களுக்கு அவர்களால் வாங்க முடிகின்ற விலையில் வழங்கபட வேண்டும் என்ற கொள்கை முடிவை 1948 ஆம் ஆண்டில் எடுத்தது.  மின்சார வழங்கல் சட்டம் 1948 என்பது அதன் வெளிப்பாடாக அமைந்தது.  மேலும், சுதந்திர இந்தியாவில் இயற்றப்பட்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மின்சாரம் குறித்த செயல்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆகிய இரண்டுமே கையாள வேண்டும் என்று கூறியது.  

இதன் காரணமே மின்சாரம் என்பது பொது பட்டியலில் வைக்கப்பட்டது.

1948 ஆம் ஆண்டின் மின்சார வழங்கல் சட்டமானது, மினசாரத்தின் விலையைப் பொருளாதாரத்தில் வலிமை பெற்ற பிரிவினருக்கு அதிகமாகவும், ஏழை மக்களுக்குக் குறைவாகவும் நிர்ணயிக்க வழிவகை செய்தது.  இதுவே CROSS SUBSIDY  என்றழைக்கப்பட்டது.  1948 ஆம் ஆண்டின் மின் வழங்கல் சட்டத்தின் அச்சாணியாக இந்த CROSS SUBSIDY  என்ற கருத்தாக்கமாக அமைந்தது.  இந்த சட்டத்தால் சமூகத்திற்கு அளிக்கப்பட்ட முக்கிய பங்களிப்பாகவும் பின்னாளில் காலங்களில் போற்றப்ட்டது.

திட்டமிடுதல் விரிவாக்கம் முதலியவற்றை அரசின் நேரடித் தலையீடு இல்லாமல் ஒப்பீட்டளவில் சுதந்திரமாக முடிவெடுக்க கூடிய  செமி அட்டானமஸ் தன்மை கொண்ட மின் வாரியங்களை உருவாக்க இந்த சட்டம் வழிவகை செய்தது.

இந்த சட்டமே இந்தியாவின் பெரும்பகுதி கிராமங்களுக்கு  மின்சாரத்தைக் கொண்டு செல்லவும், அதன் மூலம் மக்களின் வாழ்க்கையில் பெரும் மறு மலர்ச்சி ஏற்படவும் வழி வகை செய்தது.  இந்த சட்டமே இந்தியாவின் மின்சாரம் தொடர்பான அனைத்து அடிப்படை மேம்பாட்டுப் பணிகளையும் 2003 ஆம் ஆண்டு வரை வழி நடத்திச் சென்றது.


1991 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த புதிய பொருளாதாரக் கொள்கையானது தனது முதல் தாக்குதலை மின்சாரத் துறையில் தொடங்கியது.  மின்சார துறையின் புனரமைப்பு என்ற பெயரில் அந்தத் தாக்குதல் தொடுக்கப்பட்டது.

நாட்டின் அடிப்படைக் கட்டுமானங்களில் முதன்மையானது மின்சாரமே.  ஏனெனில் அது நாட்டின் அனைத்துத் துறைகளுடன் உள்ளூரத் தொடர்பு கொண்ட ஒன்றாகவும், அவற்றைக் கட்டுப்படுத்தும் தன்மையைக் கொண்டதாகவும் இருக்கிறது.  மாபெரும் நிதி முதலீடுகளுக்கும், கனரக எந்திரங்களின் வணிகத்திற்கும், நிரந்தரத் தேவையுள்ள உற்பத்திற்கும், லாபம் கொழிக்கும் சந்தைக்கும் மையப்புள்ளியாக மின்சாரத் துறை அமைந்திருக்கிறது.  இவையே மின்சாரத் துறையானது புதிய பொருளாதாரக் கொள்கையின் முதல் இலக்கானதற்கான காரணமாகும்.

இந்த காரணங்களுக்காகவே, மின் உற்பத்தி முதலில் தனியாருக்குத் திறந்து விடப்பட்டது. அவர்களின் உற்பத்திற்கும், வணிகத்திற்கும் உதவும் வகையில் மின்சாரத் துறையினை இதுவரை வழிநடத்தி வந்த மாநில அரசின் அதிகாரம் மாற்றப்பட்டது.  இந்த அதிகாரமானது சட்டமன்றங்களுக்கும், மாநில அரசுக்கும் பதில் சொல்ல அவசியமில்லாத, ஆனால் அதே நேரத்தில் தனியார் துறையினாரால் எளிதில் கையாள முடிகினற் நிர்வாக அமைபு ஒன்றிடம் கைமாற்றி அளிக்கப்பட்டது.  1998 ஆம் ஆண்டின் ஒழுங்குமுறை ஆணையச் சட்டம் மூலமாக இது நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட இந்த நிர்வாக அமைப்பானது மின ஒழுங்குமுறை ஆணையம் என்று அழைக்கப்பட்டது.  இந்த அமைப்பிறகு ஓரளவு நீதிபரிபாலனை  அதிகாரமும் வழங்கப்பட்டது.

இதன் பிறகும் தனியார் துறையின் வசதிக்கேற்ப மின்சாரத் துறையினை மேலும் புனரமைக்க மத்திய அரசு முற்றிலும் புதிய சட்ட வரைவு ஒன்றினை  2000 ஆண்டில் அறிமுகப்படுத்தியது. இதன் முக்கியக் குறிக்கோள 1948 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட மின் வழங்கல் சட்டத்தின் உயிரான CROSS SUBSIDY  கருத்தாக்கத்தைப படிப்படியாக நீக்குவது தான்.  மின்வாரியத்தின் கட்டமைப்புகளை தனியாரின் பயன்பாடுகளுக்கு ஏதுவாகத் திறந்து விடுவது தான் இந்த சட்டவரைவின் அடுத்த முக்கிய குறிக்கோளாகும்.  இதுவே பின்னர் 1998 ஆம் ஆண்டில் ஒழுங்குமுறை ஆணையச் சட்டத்தினை உள்ளடக்கிய மின்சார சட்டம் 2003 ஆக நிறைவேப்பட்டது.

மின்சாரச் சட்டத்தில் (2003) உள்ள முக்கிய அம்சங்கள்.

மின் உற்பத்திக்கு உரிமம் பெற வேண்டிய அவசியம் இல்லை. 

க்ராஸ் சப்சிடி என்பது விலக்கிக் கொள்ளப்படும் என்று தொடங்கி கடைசியில் 2007 ல் க்ராஸ் சப்சிடி குறைக்கபடும் என்று சட்டத் திருத்தம் செய்யப்பட்டது.

மின்சாரத்தினை வணிக ரீதியில் விற்க வேண்டும். அதாவது சேவைப் பொருள் என்பது லாபமீட்டுவதற்கான ஒரு பொருளாக மாற்றப்பட்டது.

மின்சாரத்தினை இனி எவரும் வணிகம் செய்யலாம்.

மின்வாரியத்தின் மாநிலம் தழுவிய மின் கட்டமைப்பினை மின் வணிகர்களும், தனியார் மின் உற்பத்தியாளர்களும் தங்களின் வணிகத்திற்காக இனி பயன்படுத்திக் கொள்ளலாம். இது தான் மின்சாரச் சட்டத்தினை இயக்கும் மைய அச்சாணியாகும்.

ஒரே நிறுவனமாக இதுவரை இருந்த வந்த மின்வாரியமானது இனி மின் உற்பத்தி, மின் தொடர், மின் விநியோகம் என்ற நிறுவனங்களாகப் பிரிக்கப்படும்.

மின்சாரம் தொடர்பான முடிவுகளை எடுக்கும் உரிமையானது மாநில அரசிடமிருந்து கைமாற்றப்பட்டடு மாநிலத்தில் புதிதாக அமைக்கப்படும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்படைக்கபடும். இதன் செயல்பாட்டில் மாநில அரசால் தலையிட முடியாது.

மின்சார விநியோகம், வணிகம் மின் தொடர் அமைப்புகளுக்கான  உரிமங்களை மின்சார ஒழுங்குமுறை ஆணையமே வழங்கும்.

மின்சாரக் கட்டணங்கள், கொள்முதல் விலை, விற்பனை விலை ஆகியவற்றை ஒழுங்குமுறை ஆணையமே நிர்ணயிக்கும்.

இனி ஒழுங்குமுறை ஆணையமே மின்சார உற்பத்தியாளர்களும், மின் துறையின் இதர செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு உரிமைகளைப் பெற்றவர்களுக்கும் இடையில் ஏற்படும் வழக்குகளை விசாரிக்கும் நீதி பரிபாலன அதிகாரத்தினை பெற்ற அமைப்பாகச் செயல்படும்.

இந்த வழக்குகளுக்கான மேல் முறையீடுகளை விரைவில் தீர்ப்பதற்காக தனி பாதையாக தேசிய அளவில் மேல் முறையீட்டுத் தீர்ப்பாயம் இருக்கும்.

மாநிலங்களுக்கிடையோன மின்சாரம் தொடர்பான செயல்பாடுகளை மத்திய மின்சார ஆணையமே நிர்வகிக்கும்.


இதை முழுமையாக படித்தவர்களுக்கு ஒன்று புரியவேண்டும்.  இனி மின்சாரம் என்பது வணிகம் சார்ந்த விற்பனை பொருள்.  மாநில அரசாங்கத்திற்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை.  

இப்போதைய தமிழ்நாட்டின் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் வீரமாய் பேசியதன் நோக்கத்தையும், ஆனால் உண்மை நிலவரங்களையும் நம்மால் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள முடியும்.

இனி கை நிறைய காசு இருந்தாலும் கரண்டு  மத்திய அரசாங்கம் நினைத்தால் மட்டும் தான் சாத்தியம். இது தவிர மாநில அரசாங்கத்திடம் உள்ள வாய்ப்புகளை தொடர்ந்து பார்க்கலாம்.
இந்தியாவிற்குள் 1991 ஆம் ஆண்டு உள்ளே வந்த தாரளமயமாக்கல் என்ற பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைக்குப் பிறகு உருவானது தான் 'தனியார் மின் உற்பத்தியாளர்'  (INDEPENDENT POWER PRODUCER -  IPP ) என்ற புதிய பூபாள ராகம் உருவானது.  

ராகத்தை உருவாக்கியவர்கள் உருவாக்கியதோடு விட்டு விட்டார்கள்.  உருவான மாற்றத்தில் இப்போது மக்கள் தாங்கள் பயன்படுத்த முடியாத மின்சாரம் குறித்து வழிந்தோடும் வியர்வையை துடைக்க முடியாமல் கசகசப்பில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். .


இந்தியாவில் மாநில மற்றும் மத்திய அரசாங்கம் என்று இரண்டு இருப்பதைப் போல இந்த இரண்டு அரசாங்கத்திற்கு அப்பாற்பட்டு பல அரசாங்கங்கள் வெகுஜன மக்களுக்கு தெரியாமல் இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றது.

அவை  அமைப்பு  என்ற பெயரில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. 

இவைகள் மக்களுடன் நேரிடையான தொடர்பில் இருப்பவை அல்ல.  ஆனால் மக்களின் 'நல்வாழ்வுக்கு' என்று உருவாக்கப்பட்டவை. இப்போது மின்சாரம் என்ற துறையைப்பற்றி நாம் பார்த்துக் கொண்டு வருவதால் இதில் உள்ள ஒரு அமைப்பைப் பற்றி நாம் பேசியாக வேண்டும்.

இந்தியாவில் மக்களுக்குத் தேவையான பல அவசியமான பொருட்கள்  பொதுப்பட்டியலில் இருக்கும்.  மின்சாரம், குடிநீர், பலவிதமான தானிய வகைகள், உணவு சம்மந்தப்பட்டது என்று பட்டியலின் நீளம் அதிகம். 

கீழே உள்ள சுட்டிகளின் மூலம் இது சம்மந்தப்ட்ட தேடல் இருப்பவர்கள் படித்துக் கொள்ளலாம். 

இது போன்ற விசயங்களில் அரசாங்கம் கொள்கை ரீதியாக அத்தனை சீக்கிரம் முடிவு எடுத்து விட முடியாது. ஆனால் இந்தியாவை ஆண்டு கொண்டுருப்பது நம்மைப் பொறுத்தவரையிலும் பிரதமர்.  ஆனால் நம்முடைய பிரதமரை ஆட் வைத்துக் கொண்டுருப்பது பெரிய நிறுவனங்களின் லாபி அமைப்புகள். இது இந்தியாவில் மட்டுமல்ல.  உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டின் அரசாங்கத்தையும் பல்வேறு நிறுவனங்கள் தான் தாங்கள் நினைத்தபடி ஆட வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு சாதகமான ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும். ஆனால்  மக்களிடம் எதிர்ப்பு வந்தால் என்ன ஆகும்?  

இதன் காரணமாகத்தான் தனிப்பட்ட அமைப்புகள்  உருவாக்கப்படுகின்றது. மாநில அரசாங்கம் என்பது ஒரு அமைப்பு. அது தன்னிச்சையாக செயல்படும் பட்சத்தில் மத்திய அரசாங்கத்திற்கு மதிப்பு இருக்காது.  லாகனை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியத்தில் தான் நம்முடைய மத்திய அரசாங்கம் இருக்கிறது.

மத்தியில் கூட்டாட்சி.  மாநிலத்தில் சுயாட்சி போன்ற பழைய கோஷங்களை இப்போது நம் நினைவில் கொண்டு வரவேண்டும்.

அதற்கு இந்தியா என்பது பல இனங்கள், பல மொழிகள், பல நம்பிக்கைகள் சேர்ந்த 'வேற்றுமையில் ஒற்றுமை' என்பது போன்ற கருத்தாழமுள்ள பல பாடங்களை பள்ளிக்கூடங்களில் படித்து வந்துருப்போம். நாமும் அதையே நம்புவோம்.  உண்மைகள் அது எப்போதும் போல அது தனியாகவே ஒரு ஓரமாக இருந்து விட்டு போகட்டும். .

இன்னும் சற்று புரியும்படி சொல்லப்போனால் தற்போது ஏறிக் கொண்டுருக்கும் பெட்ரோல் விலைக்கு 'நாங்கள் காரணம் அல்ல. அது சுயாட்சி பெற்ற எண்ணெய் நிறுவன செயல்பாடுகளின் அடிப்படையில் அமையப் பெற்றது. அவர்களின் அதிகாரத்தில் நாங்கள் நுழைய முடியாது' என் நிதி அமைச்சர்கள் சொல்வதை படித்து இருப்போம் தானே?  


அதைப் போலவே மின்சாரத்திற்கென்று ஒரு அமைப்பு இருக்கின்றது. 


இதற்கு மற்றொரு பெயர் நிழல் அரசு. இதை கட்டுப்படுத்த மாநில அரசாங்கத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை. இது அமெரிக்காவின் நிர்வாக அமைப்பிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.,  எவருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.

இவர்களின் தாக்கம் ஒவ்வொரு துறையிலும் எதிரொலிக்கும்.  இவர்கள் கட்டளையை நிறைவேற்றியே ஆக வேண்டும்.  ஆனால் பின்விளைவுகளுக்கு இந்த அமைப்பு பொறுப்பேற்காது. அத்துடன் பகுதி நீதி பரிபாலன (QUASI JUDICIARY) . அதிகாரமும் இவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

ஏறக்குறைய நம்முடைய ஜனநாயக நாட்டில் இதுவொரு சர்வாதிகார அமைப்பாகும். ஆனால் மக்களை விட தனியார் காட்டில் தான் மழை பெய்து கொண்டிருக்கிறது என்பதை வைத்து நீங்களே யூகித்துக் கொள்ள வேண்டும்.

மாநில அரசாங்கத்திற்கு அப்பாற்பட்டு செயல்படும் அமைப்பு.  

இதில் மற்றொரு வேடிக்கை என்னவென்றால் மின்சாரம் என்பது பொது பட்டியலில் உள்ளது. மத்திய மாநில அரசாங்கம் இரண்டும் சேர்ந்து முடிவு செய்யப்பட வேண்டிய ஒரு துறையாகும்.

ஆனால் தாரளமயமாக்கல் கொள்கை இந்தியாவின் உள்ள வந்த பிறகு மத்திய அரசாங்கத்தால் மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உருவாக்கிய பிறகு மாநில அரசாங்கம் எதுவும் இதில் தலையிட முடியாத நிலை உருவானது.

இந்த ஒழுங்கு முறை ஆணையங்களே புதிய மின் உற்பத்தி நிலையங்களுக்கு உரிமம் வழங்குவது, மற்றும் மின் கட்டணத்தைத் தீர்மானிப்பது ஆகிய பணிகளை மேற்கொள்ளும்.

மாநில மின் வாரியங்கள் தம்மை மறு சீரமைத்துக் கொள்ள வேண்டும். இதன்படி சில மாநிலங்களின் மின் வாரியங்கள் மின் உற்பத்தி, மின் கடத்தல் மற்றும் திறந்த வழி பயன்பாடு என்பதை கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் மின் வழங்கலில் மறு சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாக வேண்டும். பாதுகாப்பான சிக்கனமான மின் வலையங்களை தேசிய மற்றும் பிராந்திய அளவில் உருவாக்கப்பட வேண்டும்.

இதனை சாத்தியப்படுத்தவே பாராளுமன்றம் 2003 ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தினை இயற்றியது.

இதுவே தனியார்களை ஊக்குவித்து உள்ளே கொண்டுவர ஏற்பாடுகளை செய்தது.  தனியார்கள் உள்ளே வந்தால் மின் நிலையங்கள் சிறப்பாக பராமரிப்பு செய்யப்படும், மின்சாரம் வீணாகாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு விதமாக மின்சார தேவை இருப்பதால் தெளிவான மின் வணிக சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்தும் என்று நம்பியது.

திட்டம் எல்லாம் சரி தான்.

ஆனால் நடைமுறையில் நடந்தது என்ன தெரியுமா?

1991 ஆம் ஆண்டு தாராளமயமாக்கல் கொள்கை உள்ளே வந்ததும் முதல் முறையாக 1994 செப்டம்பரில் ஓரிசா மாநில அரசும் உலக வங்கியும் கையெழுத்திட்டன. அப்போது ஒரிசா மாநில மின் வாரியம் இந்திய மாநிலங்களிலேயே அந்த அளவுக்கு சீக்காளியாக இருந்தது. 

எப்போதும் போல புத்திசாலி நிபுணர்கள் குழு என்று ஒன்று தனியாக அமைக்கப்பட்டது. இதற்காக இங்கிலாந்தில் இருந்து பொது நிர்வாகம் மற்றும் சட்ட நிர்வாக ஆலோசகர்களும், அமெரிக்காவில் இருந்து பொருளாதார நிர்வாக ஆலோசகர்களும், கனடாவில் உள்ள பொறியியல் நிர்வாக ஆலோசகர்களும் இறக்குமதி செய்யப்பட்டார்கள்.

இதற்காக சுமார் 300 கோடி ரூபாய் (6.3 கோடி அமெரிக்க டாலர்கள்) செலவானது.

இந்த செலவுக்கான நிதியை உலக வங்கி போன்ற பல்வேறு சர்வதேச நிதி நிறுவனங்கள் ஒரிசா மின் வாரியத்திற்குக் கடனாக அளித்தன. 

1995 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரிசா மாநிலத்தின் மின் கடத்தல் நிறுவனமானGRID CORPORATION OF ORISSA - GRIDCO) க்கு மறுசீரமைப்புக்காக கொடுக்கப்பட்ட சுமார் 1700 கோடி ரூபாய்க்கான ( 35 கோடி அமெரிக்க டாலர்கள்) கடனானது ஒரிசா மின் வாரியத்தை கடுமையான கடன் சுமையில் தள்ளியது. 


கடைசியாக என்ன நடந்தது?  அது தான் இங்கே முக்கியம்.

அப்போது இருந்த உலக வங்கித் தலைவர் ( former world bank president James wolfensohn ) சொன்ன வாசகம்.

"ஒரிசா அனுபவத்தை வெற்றிகரமானது என்று கூறிவிட முடியாது. இதன் மூலம் பல புதிய அனுபவ பாடங்களை நாங்கள் கற்றுக் கொண்டோம்" என்றார்.

கிராமத்தில் வழக்கத்தில் உள்ள ஒரு பழமொழி "ஊரான் விட்டு நெய்யே.. என் பொண்டாட்டி கையே" போன்றவை உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.

ஒரிசா மக்களின் பொதுப்பணத்தை எடுத்து கற்றுக் கொண்டவர்கள் தான் இந்த இறக்குமதி செய்யப்படும் நிபுணர்கள்.

மினவாரிங்களின் கடன் சுமை என்பது அதில் உள்ள நிர்வாக சீர்கேடு என்பது ஒரு புறம் இருந்தாலும் முழுக்க முழுக்க அது தனிப்பட்ட நபர்களின் லாபங்களுக்காகவே அமைப்புகள் மூலம் ஒவ்வொரு கொள்கையும் உருவாக்கப்படுகின்றது.  அதையே சரி என்று சொல்லவும், அதைத்தான் கடைபிடித்தே ஆக வேண்டும் என்ற கொள்கையும் உருவாக்கப்பட்டுக் கொண்டுருக்கிறது என்பது தான் உண்மை.

காரணம் நாம் அனுபவித்துக் கொண்டு இருக்கும் ஜனநாயகத்தில் உள்ள தவறுகள் மெதுவாக காலப்போக்கில் நீக்கப்படும்.  அதுவரைக்கும் நாம் அமைதியாக வாழ பழகிக் கொள்ள வேண்டும்.
இந்த தொடரின் முடிவில் வந்து நிற்கின்றோம். எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் வழியா இல்லை பூமியில்? என்பதையும் யோசிக்கத்தானே வேண்டும்.

தற்போதைய தமிழக முதல்வர் அடுத்த வருடம் தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றியே தீருவேன் என்று சூளுரைத்துள்ளார்.  ஆனால் நிதர்சனமான உண்மைகள் என்ன என்பதையும் நாம் பார்க்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு அன்றைய பேச்சு அன்றோடு போச்சு.  ஆனால் பாதிக்கப்படும் மக்களுக்கு?  
நாம் இதுவரையிலும் தனியார் மின் உற்பத்தியாளர்கள் மூலம் தமிழக மக்களுக்கு எந்த காலத்திலும் பிரயோஜனமில்லை என்பதையும் பார்த்து விட்டோம். ஆனாலும் மத்திய மாநில அரசாங்கங்கள் அவர்களை முன்னுக்கு கொண்டு வருவதில் தான் அதிக அக்கறை காட்டுகின்றது. காரணம் காசு இல்லாவிட்டால் கட்சி நடத்த முடியாது என்பது கட்சி விசுவாசிகள் சொல்லும் காரணமாகும். 

26.3.2012 அன்று சமர்பிக்கபட்ட பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசு 3,800 மெகாவாட்டுக்கான மின் திட்டங்களை அறிவித்துள்ளது.  அது உடன்குடி 800 மெகாவாட். உப்பார் திட்டம்  எண்ணூர் 1600 மாற்றுத் திட்டம்600 மெகாவாட்,தூத்துக்குடி 4வது கட்டம் 800 மெகாவாட் 

ஆக மொத்தம் 3800 மெகாவாட்.

இதற்கும் மேலாக எண்ணூரில் 600 மெகாவாட்டுக்கான ஒரு திட்டத்தையும் எரிவாயுவினை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் 1000 மெகாவாட்டிறக்ன இரு திட்டங்களையும் தமிழக முதல்வர் அறிவித்து உள்ளார். 

இவற்றால் தமிழகத்தின் மின் பற்றாக்குறையத் தீர்க்க முடியுமா?முதல்வர் சொன்னபடி தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக மாற்றி விடமுடியுமா?

1991 - 2002 ஆம் ஆண்டு காலகட்டத்திற்குள் இந்தியாவிற்குள் மின்சாரத் துறையில் மூதலீடு செய்ய வந்த வெளிநாட்டு நிறுவனங்கள் 4.5 சதவிகிதம்.  அத்தனை பேர்களும் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விட மகராஷ்டிராதமிழ்நாடு,ஆந்திராகர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களையே தேர்ந்தெடுத்தனர். இந்த மாநில மின்வாரியங்கள் லாபகரமாக செய்ல்பட்டுக் கொண்டுருந்தன என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

1991 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட புதிய பொருளாதார கொள்கைக்குப் பிறகு மூன்று தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் இந்த துறையில் ஈடுபட அனுமதித்து உள்ளனர்.

முதலாவதாக மாநில மின் வாரியங்களோடு(புரிந்துணர்வு மற்றும் வெளிப்படையான போட்டி என்ற அடிப்படைகளில்) நீண்ட கால மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் செய்து கொள்ள நிறுவனங்கள் அனுமதி அளித்தனர். 

இரண்டாவதாக சுய மின் தேவையை ஈடுசெய்து கொள்வதற்கான சுய மின் உற்பத்தி நிலையங்கள்  இங்கே அனுமதிக்ப்பட்டன. 

மின்சார வாரியத்துடன் மின் கொள்முதல் ஒப்பந்தததை செய்து கொள்வதற்காக நிர்ப்பந்தமற்ற அதே நேரத்தில் தனியார் மின் வணிக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான உரிமையைக் கொண்ட வணிக மின்சார உற்பத்தி நிலையங்களும் அனுமதிக்கபட்டன.

ஆனால் அரசாங்கம் விரும்பிய ஆசைப்பட்ட அத்தனை மாற்றங்களும் கடந்த 1991 க்குப் பிறகு மின்துறையில் நடந்தேறி வந்துள்ளன.  ஆனால் மக்களுக்கு இறுதியில் கிடைத்தது தான் என்ன?

தமிழகத்தின் இன்றைய மின் தேவை 12,000 மெகாவாட் .ஆனால் 8000 மெகாவாட். தான் உற்பத்தியில் இருக்கின்றது. 

2007 ஆம் ஆண்டில் தொடங்கிய மின் வாரியத்தின் சுய உற்பத்தி மற்றும் நெய்வேலி என் எல் சி & என் டி பி சி யின் கூட்டு முயற்சி மின் நிலையங்கள் 2012 ஆண்டின் இறுதிக்குள்ளாகவோ அல்லது 2013 தொடக்கத்திலேயோ தம் உற்பத்தியைத் தொடங்கி விடும். .தோராயமாக 2013 கோடைக காலத்தில் சுமார் 3300 மெகாவாட் மின்சாரம் அதிகமாகக் கிடைக்க வாய்பிருக்கிறது.

திருவள்ளுர் என்சிபிசி மற்றும் தமிழ்நாடு மின்வாரியமும்  இணைந்து 1500 மெகாவாட்.  இதில் த நா மினவாரியத்தின் பங்கு 1041 மெகாவாட்.

வட சென்னை இரு யூனிட் 1200 மெகாவாட். 

மேட்டுர் 600 மெகாவாட்.

நெய்வேலி என் எல் சி உடன் த நா மின்வாரியமும் இணைந்து 1000 மெகாவாட் இதில் மின்வாரியத்திற்கு பங்கு 367 மெகாவாட்.

சிம்மத்ரி 3 வது யூனிட் 95 மெகாவாட்

ஆக மொத்ம் 3323 மெகாவட்.

அணுமின் நிலையங்களில் இருந்து 1100 மெகாவாட் கூடுதலாக மின்சாரம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டாலும் கல்பாக்கம் மற்றும் கைகா அணு மின் நிலையங்கள் இதுவரை 30 சதத்திற்குக் கீழே தான் உற்பத்தியைக் காட்டியுள்ளன என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.  அணு மின் நிலையங்களில் இருந்து அதிக பட்சமாக 500 மெகாவாட் கிடைக்கும் என்பதே பெரிய எதிர்பார்ப்பு தான். .

2013 ஆம் ஆண்டில் மின் தேவை 7.சதம் கூடியிருக்கும் என்று வைத்துக் கொண்டால் அதன் கோடை காலத்தில் தமிழகத்தின் மின் தேவை 13000 மெகாவாட்டாக இருக்கும். அப்பொழுதும் 1200 மெகாவாட் அளவிற்குப் பற்றாக்குறை இருந்து கொண்டு தான் இருக்கும். தமிழகம் நிச்சயம் மின்வெட்டை சந்திக்க வேண்டிதான் வரும்.

2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு 2017 வரை தமிழகத்தில் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்க சாத்தியமே இல்லை.

2014 ஆம் ஆண்டில் மாநிலத்தின் மின்  பற்றாக்குறைய 2200 மெகாவாட்டாகக் கூடிவிடும். புதிய தொழிற்கூடங்கள் நிறுவப்படும் பட்சத்தில் இது மேலும் அதிகரிக்கும். 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் ஆண்டாதலாலும் தேர்தல்கள் கோடை காலத்தில் நடத்தப்படும் என்பதாலும் இந்தக் கூடுதல் தேவையை ஈடுகட்ட அரசானது சந்தையில் கூடுதல் விலை கொடுத்தே மின்சாரத்தை வாங்கும்.  இதன் காரணம் மின்வாரியத்தின் நஷ்டம் படு வேகமாகக்கூடிப்போகும்.

2015 ஆம் ஆண்டில் மின் பற்றாக்குறையானது இன்று இப்போது உள்ளதைப் போல 3300 மெகாவாட்டாகக்கூடிப் போகும். 

2014 ஆம் ஆண்டோடு ஜிஎம்ஆர் நிறுவனத்தின் 2,200 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்திக் காலகட்டம் முடிந்து போயிருக்கும்.  2016 ஆம் ஆண்டில் 200 மெகாவாட்டுக்கான மதுரை மற்றும் சாம்பல்பட்டி மின் நிலையங்களின் உற்பத்தி முடிந்து போகும்.

இந்த சூழ்நிலையில் 15 ஆண்டுகள் கடந்து விட்ட திரும்பகோட்டை (107 மெகாவாட்) இருமுறை பழுதுபட்ட குத்தாலம் (101 மெகாவாட்) மின் நிலையங்கள் எப்படி உதவும் என்று சொல்ல முடியாது.

உருவாக்கப்படும் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் எப்படி உதவும் என்று சொல்ல முடியாது.  புதிய மின் உற்பத்தி நிலையங்கள் வர வாய்பில்லாத சூழ்நிலையில் தமிழகத்தின் மின் தேவை 4500 மெகாவாட்டைத் தாண்டியிருக்கும்.  

எனவே மின்வாரியத்தைக் காப்பாற்வே முடியாத சூழ்நிலை 2016-17 ஆம் ஆண்டில் நிகழலாம்.

இதனை தடுக்க வழிகள் உண்டா?

2003 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மின்சார சட்டத்தினால் உருவாக்கப்படட தனியார் மின நிறுவனங்கள் (ஏறக்கறைய பத்து நிறுவனங்கள்) தமிழ்நாடு முழுக்க பிரம்மாண்டமாக வளர்ந்து கொண்டு இருக்கின்றன.

இந்த பத்து நிறுவனங்களும் உற்பத்தி செய்யப்போகும் 18140 மெகாவாட் ஆகும். இவர்கள் தயாரிக்கப் போகும் மின்சாரம் எதுவும் தமிழ்நாட்டு மக்களுக்கு அல்ல. அது வியாபாரத்திற்கு. மேற்கொண்டு நமக்கு அவசியம் தேவைப்படால் அவர்கள் சொல்லும் விலைக்கு நாம் கட்டுப்பாட்டால் வாங்கிக் கொள்ளலாம். இதில் ஒரு நிறுவனம் தான் அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் உள்ள சி. பிரதாப் ரெட்டி அவர்களுடையது.  ஏறக்குறைய 2000 மெகாவாட் அளவுள்ள தமிழ்நாட்டில் மரக்காணத்தில் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிறுவனங்களின் பட்டியல்


COASTAL ENERGEN PVT LTD1200 MWTUTICORIN
TRIDEM PORT POWER LTD2000 MWNAGAPATTINAM
UDI INFRASTRUCTURE PVT LTD2000 MWCUDDALORE
SRI CITY INFRASTRECTURE DEVELOPMENT LTD1000 MWMANAPPADU
IND BARATH POWER MADRAS PVT LTD1320 MWTUTICORIN
PEL POWER PVT LTD (PATEL ENGG. LTD)1050 MWNAGAPATTINAM
NSL NAGAPPATTINAM & INFRATECH PVT LTD1500 MWNAGAPATTINAM
IL AND FS TAMIL NADU POWER CO LTD3600 MWCUDDALORE
APPOLLO INTRASTRUCTURE PROJECTS FINANCE CO PVT LTD2000 MWMARAGGANAM
SRM ENERGY PVT LTD2000 MWCUDDALORE
TOTAL18140 MW

சரி, இவர்களால் நமக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. மீதி இருக்கும் வாய்ப்புகள் தான் என்ன? 

1. ஆந்திராவில் உள்ள சிம்மத்திரி முதல் நிலையத்தின உற்பத்தித் திறனான 1000 மெகாவட்டில் தமிழகத்திற்கு சட்டபடி கிடைக்க வேண்டிய ஆனால் இதுவரையிலும் கொடுக்கப்டடாத பங்கு 190 மெகாவாட் ஆகும். தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இரண்டாவது நிலையத் திறன் கூட இன்று வரையிலும் ஆந்திரத்திற்கே வழப்பட்டுள்ளதாக ஆந்திர முதல்வர் தெரிவித்துள்ளார்.

2. நெய்வேலி முதல் நிலையத்தின் உற்பத்தித் திறன் 600 மெகாவாட் ஆகும்.1962ல்நிறுவப்பட்டது. இந்த 600 மெகாவாட்டும் தமிழகத்திற்குத்தான் என்ற ஒப்பந்தம் இருக்கிறது. இது புதுப்பிக்கப்படும் போது அதன் திறன் 1000 மெகாவாட்டாகும்.  இந்த 1000மெகாவாட்டையும் தமிழகத்திற்கு பெற முடியும் .

தூத்துக்குடியில் அமையவிருக்கும் என்எல்சி மினவாரியக் கூட்டு மின் நிலைய ஒப்பந்தப்படி உள்ள 387 மெகாவாட்டுக்குப் பதிலாக 750 மெகா வாட்டைப் பெற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. இந்தியாவின் கிழக்கு மேறகுப் பிராந்தியங்களில் இருந்து கிடைக்கும்குறைந்த விலை மின்சாரத்தைத் தமிழகத்திற்கு கொண்டு இன்று போதுமான மின் பாதைகள் இல்லை.  இதை அமைக்க ஏற்பாடு செய்யதாலே பாதிப் பிரச்சனைகள் தீர்ந்து விடும்.

5. தொடக்கம் முதலே தனியாருக்கு மட்டுமே சாதகமான ஒழுங்குமுறை ஆணையத்தை கலைக்கப்படாதவரைக்கும் மின்சாரச் சட்டத்தை நீக்க முயற்சி எடுக்காத வரையிலும் எந்த மாறுதல்களும் நடை பெறப் போவதில்லை.

2016-2017 ஆண்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியம் என்பது இல்லாமல் போயிருக்கும்.  தனியார் மூலம் மட்டும் மின்சாரத்தை பார்க்க முடியும்.

கூட்டு முதலீட்டுத் திட்டங்களான நெய்வேலி அனல் மின் நிலையம் தமிழ்நாடு மின்வாரியம் தேசிய அனல் மின் கார்ப்ரேஷன் தமிழ்நாடு மின் வாரிய திருவள்ளுர திட்டம் ஆகியவை 2002-2003 ஆம் ஆண்டுகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டன என்றாலும் கூட இவை இந்த பத்தாண்டுக்குப் பிறகே செயல்பாட்டுக்கு வரவிருக்கின்றது.

ரூ 10,000 கோடி முதலீட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகமும் (டிட்கோ) இணைந்து திரவ இயற்கை எரிவாயு முனையம் ஒன்றினைத் தொடங்க வேண்டும் என்பதற்கான பேச்சுவார்த்தையை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தமிழ்நாடு அரசுடன் 24 மே 2010 ஆம் தேதியன்று தொடங்கியது.  இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்க்கும்தமிழ்நாடு தொழில் வளர்சசிக் கழகத்துக்கும் இடையே ஆகஸ்டு 2010 ல் கையெழுத்தானது.  

இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் இது தான் முதல் மறு வாயுவாக்கம் முனையமாகும்.  இந்த முனையமானது ஆண்டொன்றுக்கு 50 லட்சம் மெட்ரிக் டன் திரவ இயற்கை எரிவாயுவைக் கையாளும் திறனைக் கொண்டிருக்கும். இந்தத் திட்டத்தினை முன்னெடுத்துச் செல்வதற்கான அடுத்த ஒப்பந்தம் 22 மார்ச் 2012 ல் கையெழுத்தானது. 

2015-16 ஆம் ஆண்டு வாக்கில் இந்தத் திட்டம்  செயல்படத் துவங்கும் என்று எதிர்பார்க்கபடுகின்றது.  இந்த திட்டத்திற்குத் தேவையான திரவ இயற்கை எரிவாயுவினை நீணட் கால அடிப்படையில் வாங்குவதற்காக கட்டார்பிரிட்டிஷ்,கேஸ் மற்றும் ரஷ்ய நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது.

இந்த தொடர் முடிவடையும் இந்த நேரத்தில் நீங்கள் இந்த வலைதளத்தை ஒரு முறை விரும்பியவர்கள் பார்த்து விடவும்.


இந்த வலைதளத்தில் உள்ள நிறுவனத்தை துபாய் நாட்டில் உள்ள அஹமது புகாரி நிறுவி உள்ளார். நிலக்கரி வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர். .டாட்டா குழுமம் போன்ற இந்திய நிறுவனங்களுக்கு மற்ற நாடுகளில் இருந்து நிலக்கரி விநியோகம் செய்வது அவரது முதன்மையான தொழில். இவரின் நிறுவனம் தூத்துக்குடியில் 1200 மெகாவாட் நிலக்கரி மின் மையம் மின் உற்பத்தியைத் துவங்கும் நிலையை அடைந்துள்ளது. மேலும் அங்கேயே 1600 மெகாவாட் நிலக்கரி மின் உற்பத்தி மையத்தை நிறுவ முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த மின் நிலையம் டாட்டா பவர் டிரேடிங் நிறுவனத்துடன் அதன் 70 சதவிகித மின்சாரத்தினை மின கொள்முதல் ஒப்பந்தத்தை செய்துள்ளது. மீதமுள்ள 30 சதவிதிக மின்சாரத்தை என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்ட போது 

அவர் சொன்ன பதில்

"இந்த மின்சாரத்தை எவருக்கு வேண்டுமானாலும் விற்கு கொள்ளலாம் என்பதற்கான உரிமையை 2003 ஆம் ஆண்டின் மின்சாரச் சட்டம் எங்களுக்கு வழங்கி உள்ளது.  இலங்கை வங்காள தேசம்பாகிஸ்தான் போன்ற தெற்கு ஆசியாவைச் சேர்ந்த நாடுகளில் உள்ள எவருக்கும் இந்த மினச்ரத்தை நாங்கள் விற்றுக் கொள்ளலாம் எனப்தை சட்டம் உறுதிபபடுத்தி உள்ளது.  யார் நல்ல விலை கொடுக்கிறார்களோ அவர்களுக்கு விற்போம்" என்றார்.
                 
நம்முடைய சட்டங்கள் என்பது சாமானிய மக்களுக்காகவா? என்பது தற்போது உங்களுக்கு புரிந்து இருக்குமோ? .

ஸ்வீட் எடுங்க. கொண்டாடுங்க. புதிய திரைப்படங்களுக்குச் செல்வோம். விமர்சனம் எழுதுவோம். மீதி நேரம் இருந்தால் சிரிப்பொலி, ஆதித்யா சேனல் பார்க்கலாம். நாளைய பொழுதில் என்ன மாறுதல்கள் வேண்டுமானாலும் நடக்கக்கூடும்.  கவலைப்பட்டு என்ன ஆகப் போகின்றது?.

நாம் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். 

இன்றைய சூழ்நிலையில் சென்னையைத் தவிர்த்து மற்ற இடங்களில் அறிவிக்கப்படாமல் 16 மணி நேரம் மின்தடை அமலில் இருக்கிறது.  கடந்த மூன்று ஆண்டுகளில் மின்சாரத்தினால் பாதிக்கப்பட்ட தொழில்களும், நாடு இழந்த தொகையும் கணக்கில் அடங்கா. இன்று வரையிலும் எந்த மாற்றமும் இல்லை. காசு இருந்தால் கவலையில்லை என்று யோசிக்கும் நடுத்தரவர்க்கத்தினர் தற்போது பயன்படுத்திக் கொண்டு இருக்கும் இன்வெர்ட்டர், யூபிஎஸ்க்கு கூட சார்ஜ் ஏற்ற முடியாத அளவுக்கு உருவாகப் போகும் மின்தடையில் வாழப் போகின்ற நம் வாழ்க்கை நம்மை பார்த்தே சிரிக்கும் காலம் வரப்போகின்றது.

அரசியல்வாதிகளின் கொள்ளையை விட நமக்கு அரசியல்கட்சி விசுவாசம் தான் பிரதானமானது. வாழ்க்கைக்குத் தேவையான பிரச்சனைகளை விட தற்போது சாதிப் பிரச்சனைகள் தான் முக்கியமானது. நமக்கு ஏன் வீண் வம்பு என்று பாதுகாப்பாக வாழப் பழகி விட்ட சமூகத்திற்கு அஹிம்சை எண்ணமே நமக்கு முக்கியமானது. 

காந்தி சொன்ன கிராமிய பொருளாதாரத்தைப் பார்த்து கைகொட்டி சிரித்த அத்தனை பேர்களுக்கும் இனி வரும் காலங்களில் அவர் வாழச் சொன்ன வாழ்க்கை தான் சரி என்று உணரும் நேரமாகவும் இருக்கப் போகின்றது. நுகர்வு கலாச்சாரம் என்ற நுகத்தடியில் நாமே நம்மை விரும்பி மாட்டிக் கொண்டுள்ளோம். உணர்ந்துள்ள அரசியல்வாதிகளும் கனவு காணுங்கள் என்று தானே சொல்லி நம் ஆசையை அதிகமாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். பன்னாட்டு, பெரிய நிறுவனங்களின் வளர்ச்சியில் தான் இனி நம் வாழ்க்கையை வாழப் பழகிக் கொள்ள வேண்டும். . 

பத்தாண்டுகளுக்கு முன்னால் சூரிய சக்தியை பயன்படுத்தியே ஆக வேண்டும் என்று அரசாங்கங்கள் முன்னெடுத்து இருந்தால்? இன்று இந்த அளவுக்கு பிரச்சனைகள் உருவாகியிருக்குமா? 

அப்புறம் எப்படி அவர்களால் சம்பாரித்து இருக்க முடியும்? 

வெகுஜன பத்திரிக்கைகளில் கூட இத்தனை விஸ்தாரமாக எழுத முடியாது. அவர்களின் நிர்ப்பந்தங்கள் என்பது தனியாக பேசவேண்டிய சமாச்சாரம். பணத்தை சம்பாரிப்பதை விட சம்பாரித்த பணத்தை காப்பாற்று தான் இந்தியாவில் மிகப் பெரிய பிரச்சனை.. பணம் படைத்தவர்களுக்கு காப்பாற்றியே ஆக வேண்டிய பயம். மொத்தத்தில் அதுவொரு இருண்ட உலகம்.

அது சரி?

இங்குள்ள வளம் அத்தனையும் சுரண்டியபிறகு அரசியல்வாதிகளும் நாமும் எதை வைத்து நாம் நுகரப் போகின்றோம்?

தொடர் இத்துடன் முடிவடைகின்றது.  
                       ...
           
இந்த தொடர் பதிவு எழுத உதவிய புத்தக ஆசிரியர் திரு சா. காந்தி அவர்களுக்கும் உதவி புரிந்த எனது நண்பர்கள் இருவருக்கும் தேவியர் இல்லத்தின் நன்றியை இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன்.. 
        
தொடரை வாசித்த தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அத்தனை நல் இதயங்களுக்கும் என் நன்றிகள்.  
      
வலைதள வாசிப்பாளர்களுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகத்தில் இந்த தொடரை ஒவ்வொருவரும் முறை வைத்து படித்துக் கொண்டு இருப்பதாக நண்பர் அழைத்துச் சொன்னபிறகு வலையில் எழுத வேண்டிய விசயங்களுக்கு அப்பாற்பட்டு பல கூடுதல் தகவல்களை எழுதத் தொடங்கினேன். 

நான் நினைத்தபடியே இந்த தொடர் பலரின் பார்வைக்கும் சென்றடைந்தது மகிழ்ச்சியே.  இன்னமும் எழுத வேண்டிய விசயங்கள் பல இருந்தாலும் முக்கியமான தகவல்களை ஓரளவுக்கு எழுதியுள்ளேன். தேவையான நாம் புரிந்து கொண்டே ஆக வேண்டிய விசயங்களை எழுதியுள்ளேன் என்பதே எனக்கு திருப்தியாக உள்ளது. என்னை உழைக்க வைத்த நண்பர் வவ்வாலுக்கு நன்றி.
இந்த பதிவில் உங்கள் விமர்சனங்களை எழுதி வைத்தால் அது பலரின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக இருக்கக்கூடும். நிச்சயம் இதில்  நீங்கள் எழுதி வைக்கும் விமர்சனத்திறகெல்லாம் கைது நடவடிக்கை  ஏதும் இருக்காது என்பதை கூடுதல் தகவலாக விட்டுச் செல்கின்றேன்
எல்லாத் துறைகளிலும் அரசாங்கம் சார்ந்த பொதுத் துறை நிறுவனங்கள் மட்டுமே ஈடுபடும் பட்சத்தில் பயன்படுத்துவோருக்கு மாற்று ஏற்பாடு இருக்காது. அரசாங்க நிறுவனம் என்றாலே நாம் தற்போது பார்த்துக் கொண்டு இருக்கும் காலத்தோடு ஒவ்வாத தன்மை இருக்கும்.  பொது மக்களுக்கு உடனடி தீர்வு கிடைக்காது. நாம் செலவழிக்கும் காசுக்கு நல்ல சேவை கிடைக்காது போன்ற ஆயிரத்தெட்டு குற்றச்சாட்டுகள் உண்டு.

குறிப்பாக தற்போது தனியார் துறை உள்ளே வந்தவுடன் தான் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தொலைபேசி, அலைபேசி சேவைகள் விரைவாக வளர்ந்துள்ளன. தனியார்கள் கொடுக்கும் சேவையினால் தான் இன்றைய இந்தியாவில் பல துறைகளில் ஒரு உண்மையான போட்டி நிலை உருவாகியுள்ளது  என்பது எத்தனை தூரம் உண்மையோ ஆனால் அந்த அளவுக்கு தனியார் நிறுவனங்கள் மக்களை சேவை என்ற வார்த்தை கொண்டு சுரண்டல் தன்மையையும் வளர்த்து மிக விரைவில் மிகப் பெரிய நிறுவனமாகவும் வளர்ந்து விடுகின்றது. இதன் மூலம் பாதிப்புக்கு அதிகம் உள்ளாவது பொதுஜனமே.

இன்றைய தனியார் அலைபேசி நிறுவனங்கள் மேல் பொதுமக்கள் வைக்கும் குற்றச்சாட்டுக்கு எந்த நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

காலதாமதம் என்பது காலப்போக்கில் மறந்து விடு என்பதாக அர்த்தம்.

முக்கிய காரணம் நம் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்கு பின்னால் உள்ள சக்திகள்.  நமது சட்டமுறைகள் குறிப்பாக சாமானியனுக்கு  எட்டாத நிலையில் இருக்கும் சட்ட குளறுபடிகள். 
இந்த மின் துறையில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளே வந்து துண்டை காணோம் துணியைக் காணோம் என்று ஓடக்காரணமே இங்கே உள்ளவர்களை சரிக்கட்ட அல்லது அவர்களின் நோக்கங்களை புரிந்து கொள்ளவே தனியான திறமை அவர்களுக்குத் தேவைப்பட்டது. சிறப்பான சேவை என்ற நிலையில் இருக்கும் பல நிறுவனங்கள் பின்வாங்கி விட முடிந்தவரைக்கும் லாபம் என்ற நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவிற்குள் வரத் தொடங்கின. அனுபவசாலிகள் உள்ளே வரும் போது அவர்களின் கொள்கைகள் வேறுவிதமாகத்தான் இருக்கும்.

சிலரோ இது போன்ற பழக்கங்கள் எங்களிடம் இல்லை என்று கிடைத்தவரைக்கும் லாபம் என்று அள்ளிக் கொண்டு ஓடிவிட்டார்கள்.  மேற்கொண்டு வெளியே இருந்தபடி தாங்கள் விரும்பியபடி ஆட்டிவைப்பது எளிது என்று தங்கள் திட்டங்களை மாற்றிக் கொண்டு விட்டார்கள்.  இன்று வரைக்கும் பல நிறுவனங்கள் அந்த வேலையை மட்டும் தான் இந்தியாவிற்குள் செய்தும் கொண்டும் இருக்கிறார்கள்.

தொடக்கத்தில் பல ஐடி நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்குள்ளே வந்தது. தமிழ்நாட்டில் உள்ள ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பார்த்து பயந்து கர்நாடகா பக்கம் ஓடினார்கள்.  பத்தாண்டுகளில் கர்நாடகா பெற்ற வளர்ச்சி நினைத்தே பார்க்க முடியாத ஒன்று. இன்று வரைக்கும் பல நிறுவனங்கள் குஜராத் பக்கம் செல்லவே விரும்புகிறார்கள்.

அரசாங்க கொள்கை என்பது கண்கட்டி வித்தை போலவே இருப்பதால் பலருக்கும் இந்தியாவில் தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் வருவதே இல்லை.  அது குறித்தும் இங்குள்ள அரசியல்வாதிகள் கவலைப்படுவதும் இல்லை.

கட்டிங் என்பது மதுக்கடைகளில் உபயோகிக்கப்படும் வார்த்தை என்பதாக மட்டும் நீங்கள் தெரிந்து வைத்திருந்தால் இன்னமும் அரசியல் உலகத்தைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்று அர்த்தம்.

அரசியல் என்பது தற்போது ஒரு முதலீடு.  முதலீட்டை போட்டு உள்ளே வருபவர்கள் அதனை மீண்டும் எடுக்கத்தான் விரும்புவார்கள்.  ஓட்டுப் போட காசு தரமாட்டார்களா என்று யோசிக்கும் மக்கள் இருக்கும் வரையிலும் இந்த அரசியல் வணிகம் நடந்து கொண்டே தான் இருக்கும். 

கேள்விகள் என்பது கேலியாகிப் போனப் பிறகு எவர் எதைக்குறித்து பேச முடியும்?  உன் பங்கு உனக்கு? என் பங்கு எனக்கு என்பதாக மக்களும் மாறியுள்ளனர்.  இதைப் புரிந்த அரசியல்வாதிகளும் அவரவருக்கு தெரிந்த வகையில் உழைத்து மிக விரைவில் தொழில் அதிபர்களாக மாறிவிடுகின்றனர்.

இந்த இடத்தில் ஒரு சிறிய உதாரணத்தைப் பார்த்து விடுவோம். 

எஸ்டிசிஎம்எஸ் என்பது ஒரு தனியார் மின் உற்பத்தி நிறுவனம். 2002 டிசம் மாதம் தன் உற்பத்தியைத் துவங்கியது.

இதன் எரிபொருள் நெய்வேலியிலேயே கிடைக்கும் பழுப்பு நிலக்கரியாகும்.

தமிழகத்தில் எரிபொருள் வளம் குறைவே. இன்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் தனது அனல்மின நிலையங்களுக்கு தேவைப்படும் நிலக்கரியை வட மாநிலங்களில் இருந்து கப்பல் மூலமாகத்தான் கொண்டு வருகின்றது.  சென்னைத் துறைமுகத்தில் வந்திறங்கும் நிலக்கரியானது மேட்டூர் அனல் மின் நிலையத்திற்குத் தொடர் வண்டிகளின் மூலம் கொண்டு செல்லப் படுகிறது.

நிலக்கரியின் விலையானது டன் ஒன்றுக்கு தோரயமாக ரூ 900 என்று எடுத்துக் கொண்டால் அதனை மின் நிலையத்திற்குச் கொண்டு வர டன் ஒன்றுக்கு சுமார் 1600ரூபாயை செலவிட வேண்டியுள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழகத்தின் ஒரே நிலக்கரி சுரங்கத்தின் வாயிலிலேயே அமைக்ககூடிய ஒரு மின் நிலையத்தைத் தனியாருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கட்டளையிட்டது.



இந்த தனியார் மின் உற்பத்தி நிலையத்தின் உண்மையான மூலதனம் 700 கோடி  ஆனால் தன்னுடைய முதலீடு 1608 கோடி என்று கணக்கு காட்டியது. பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.

வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது.

ஆனால் நிறுவனம் இந்த வழக்கு இந்தியாவிற்ககு வெளியே தான் நடத்த வேண்டும் என்று மேலும் பிரச்சனையை உருவாக்கி விரும்பியபடியே லண்டன் நீதிமன்றத்தில் நடத்தி வெற்றியும் பெற்றது.

இந்த வழக்குக்காக ஆஜரானவர் தான் தற்போது பாரதிய ஜனதாவில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி.

மக்களுக்காக நாங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தலைவர்களின் பின்னால் இருக்கும் விசயங்களை வெளிப்படையாக எழுதப் போனால் அது இந்த தொடரின் போக்கை மாற்றிவிடும்.
தாராளமயமாக்கத்திற்குப் பிறகு உருவான தனியார் மின் உற்பத்தியில் அப்போதைக்கு என்ன சந்தை நிலவரமோ அது தான் மின் கட்டணமாக நிர்ணயிக்கப்படுகின்றது. இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமே தற்போது வீட்டுக்குப் பயன்படுத்தும் எரிவாயுவுக்கு குறிப்பிட்ட சிலிண்டருக்கு மேல் தேவைப்படும் போது மானியம் இல்லாத விலைதான் என்று உருவாக்கியுள்ளது.

அதுவும் அப்போதைய சந்தை விலை.தான் என்று சொல்லும் போது இந்த துறைகள்  தனியார் வசம் என்றால் கேட்கவும் வேண்டுமோ?

போட்டியில் இருக்கும் பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து கொண்டு லாபி அமைப்பை உருவாக்கிக் கொண்டு குறிப்பிட்ட விலையை நிர்ணயிக்கும் போது அது கடைசியில் பயன்படுத்தும் பொதுஜனத்தை தான் வந்து தாக்குகின்றது. 

தனியார்கள் மின்சார உற்பத்திக்கு வந்த பிறகு அரசாங்கம் அவசர தேவையின் பொருட்டு  பல அசாதாரணமான முடிவுகளை எடுக்கத் தொடங்கின.

எடுத்துக் காட்டாக, மின் உற்பத்திக்கென உலகில் இது வரை மிகவும் அரிதாகவே பயன்படுத்தப்படும், மிகவும் விலை கூடிய நாப்தாவை எரிபொருளாக உபயோகிக்கும் மின் நிலையங்களைக் கட்டிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

நாப்தா என்பது பெட்ரோலிய திரவத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு பொருளாகும். இது வெகு விரைவில் ஆவியாகும் தன்மையைக் கொண்டது.

மேற்கத்திய நாடுகளில்  இது ரசாயன உரம் தயாரிப்பதற்காகப் பல காலம் பயன்படுத்தப்பட்டு வந்தது.  ரசாயன உரத்தினால் நிலத்திற்கும் நீருக்கும் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு வந்த பிறகு மேற்குல நாடுகளில் ரசாயன உரத்தின் தேவை வெகுவாகக் குறைந்து போனது.  இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏற்கனவே இந்த ஆலைகளால் உபயோகிப்பட்டு வந்த நாப்தாவிற்கான புதிதான பயன்பாடு கண்டறியப்பட்டது.

அது தான் மின் உற்பத்திக்கான எரிபொருளாக அதனைப் பயன்படுத்தும் செயல்படாகும் என்றாலும்கூட மேற்குலகம் இந்த எரிபொருளின் அடிப்படையிலான மின் நிலையங்களை இன்றளவும் நிறுவவில்லை. 

இந்த மின் நிலையங்களை இரண்டு வருடங்களுக்குள்ளாகக் கட்டிக் கொள்ள முடியும் என்பதுவும், இந்த மின் நிலையங்களால் உற்பத்தி செய்யப்டும் மின்சாரம் விலை கூடியது ஆகும்.

இந்த மின்சாரத்தை வாங்கும் மாநில மின் வாரியங்கள் வெகு விரைவில் திவாலாகிவிடும். இது தான் இப்போது நடந்து கொண்டிருக்கின்றது.

மேலும் உள்ளூரில் புதிதாக இயற்கை எரிவாயு கண்டறிப்படும் போது தனியார் மின் நிலையங்களுக்கு உடனடியாக வழங்கப்பட்டது.

மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் மாநில மின் வாரியங்கள் தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இரண்டாண்டுகளுக்குள் கட்டமைக்க முடிகின்ற எரிவாயு மின் நிலையங்களைக் கட்டிக் கொள்வதைத் தடுக்கவே அனைத்து உள்ளூர்  எரிவாயு மூலாதாரங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டன.

தமிழ்நாடு மின்வாரியத்திற்கு மின் நிலையம் அமைப்பதற்காக அனுமதி வழங்காத மத்திய அரசு நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்திலேய தங்களது மின உற்பத்தியை தொடங்கிக் கொள்ள தனியாருக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

இந்த தொடர் முழுக்க தற்போதைய பூதாகர பிரச்சனையாக உருவாகியிருக்கும் மினவெட்டைப் பற்றியும், அதற்குப் பின்னால் உள்ள அத்தனை விசயங்களையும் பற்றியும் பார்த்தோம்.

இனி இதனால் என்ன மாறுதல் இந்தியாவில் தமிழ்நாட்டில் உருவாகும்?

மாநில மின் வாரியங்கள் இனி இல்லாமல போகும்.

மின் வாரியத்தின் அனைத்து சொத்துக்களையும் தனியார் மின் உற்பத்தி மற்றும் மின் வழங்கல் நிறுவனங்கள் வாங்கிக் கொள்ள அரசுகள் வழி வகை செய்யும்.

மின்சாரத்தின் விலையை சந்தையே தீர்மானிக்கும் என்பதால் சாமானிய மக்களால் இதனை இனிவரும் காலங்களில் வாங்க இயலாது

வேளாண்மை மற்றும் வீட்டு உபயோகத்திற்கு அரசுகளால் வழங்கப்படும் மின்சார மானியம் நிறுத்தப்படும்.

சிறு குறுந் தொழில் துறையினருக்கும் தேவைப்படுகின்ற மின்சாரததை அவரகள் மாநிலத்தின் மைய மின் கட்டமைப்பில் இருந்து கேட்காமல் இருப்பதற்கான வழிமுறைகளை உருவாக்கும்.  நடை முறைகளை அரசுகள் மேற்கொள்ளும்.

எடுத்துக் காட்டாக, வீடுகளிலும் வேளாண் நிலங்களிலும் மின்சாரத்தை சுயமாக உற்பத்தி செய்து கொள்ள வழிவகை செய்கின்ற சூரிய ஒளி, சிறு காற்றாலை மற்றும் குப்பையில் இருந்து தயார் செய்ய முடிகனிற் மின உபகரணங்களை இந்த  துறையினர் பயன்படுத்த வேண்டும் என்ற திட்டங்களை அரசுகள் முன் வைக்கும். 

சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு அரசு வெளியிட்ட சூரிய சக்தி கொள்கையை நினைவில் கொண்டு வரவும்..

மாநிலத்தின் மைய மின் கட்டமைப்பில் இருந்து ஒரு வேளை இந்தத் துறையினருக்கும் மின்சாரம் தேவைப்படும் எனறால், அதற்காக அவர்கள் அணு மின் நிலையங்களை மட்டுமே நம்பியிருக்கவேண்டும்.

ஏனெனில் இதர எரிபொருட்களின் அடிப்படையிலான மின் உற்பத்தி என்பது முழுமையாகத் தனியார் கைகளில் சென்றடைநதிருக்கும்.

அவற்றை அவர்கள் சந்தை விலையில் விற்பர்.  எஞ்சியிருக்கும் அரசுத்துறை மின் உற்பத்தி என்பது ஆபத்துக்கள் நிறைந்த அணு மின் நிலையங்களைச் சார்ந்தாக மட்டுமே இருக்கும்.

ஆனால் அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் யுரேனியம் மற்றும் அணு உலைகளை மட்டுமே இந்த அணு மின் நிலையங்கள் நம்பியிருக்க வேண்டும்.

இதனை அமெரிக்காவால் 2005 ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வந்தது. தற்போதைய மன் மோகன் சிங் அரசாங்கமும் வெற்றிகரமாக நிறைவேற்றியும் உள்ளது.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை இது வரும் காலங்களில் யுரேனியம் மற்றும் அணுத் தொழில் நுட்பங்களை வைத்திருக்கும் அந்நிய நாடுகளின் கைக்குச் செல்லும். .

இப்படிப்பட்டக் சமூக நிறுவனக் கட்டமைப்பில் இருந்து சமானிய மக்களால் எளிதில் வெளியேற முடியாது.

ஆனால் சாமானிய மக்களின் உபயோகத்தில் இருந்து கையாட்டப்பட்ட மின்சாரமோ பன்னாட்டு நிறுவனங்களின் தொழில் மற்றும் வாத்தகத் துறையின் கட்டற்ற வளர்ச்சிக்கு உபயோககப்படுத்தப்படும்.

இப்படிப்பட்ட சூழலுக்கான முக்கால் பங்குப் பயணத்தை இன்று நம் சமூகம் கடந்து விடடிருக்கிறது. 

கேளிக்கை விசயங்களுக்கு, நுகர்வு சந்தையில் முன்னுரிமை கொடுத்து வாழப் பழகி விட்ட சமூகத்திற்கு இனி நம்மை கேட்பதற்கு எவருமில்லை என்ற நோக்கத்தில் தான் அரசாங்கத்தின கொள்கைகள் ஒவ்வொன்றும்  உருவாக்கப்படும்.

உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.