மின் வாரியத்தில் வெளியாகும் செய்திகள் உடனுக்குடன்

Tuesday, October 22, 2013

தமிழக அரசுஊழியர் மற்றும் மின் வாரிய ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரு.1500 தமிழகஅரசு அறிவிப்பு

 தமிழக அரசுஊழியர் மற்றும்  மின் வாரிய ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரு.1500 தமிழகஅரசு அறிவிப்பு

தமிழகஅரசு     அறிவிப்பை  பார்க்க     பதிவிறக்கம் செய்ய

பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித் துள்ளார். தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப்போக்குவரத்துக் கழக ஊழியருக்கு போனஸ், நுகர்பொருள் வாணிபக் கழகம், அரசு ரப்பர் கழக ஊழியருக்கும் 20% போனஸ், வனத்தோட்டக்கழகம், தேயிலைத்தோட்டக் கழக ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் என்று அறிவித்துள்ளார்.
பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கும் 20% போனஸ் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.  கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணைய ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் என்றும்,  லாபம் ஈட்டிய கூட்டுறவு சங்க ஊழியருக்கும் 20 % போனஸ் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.