மின் வாரியத்தில் வெளியாகும் செய்திகள் உடனுக்குடன்

Sunday, October 27, 2013

ஓய்வூதியப் பலன் வழங்க மறுப்பதா?

முதலமைச்சர் விழாவில் பங்கேற்காத தொழிலாளர் களுக்கு ஓய்வூதியப் பலன் வழங்க மறுப்பதற்கு போக்கு வரத்து தொழிலாளர் சம் மேளனம் (சிஐடியு) கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார், துணைத் தலைவர் ஏ.பி.அன்பழகன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக்கழகங்களில் பணி புரியும்
தொழிலாளர்களுக்கு பணி ஓய்வுபெறும்போது வழங்க வேண்டிய பணிக் கொடை, ஓய்வூதிய தொகுப்புத்தொகை போன்றவை உரிய காலத்தில் வழங்கப் படுவதில்லை. கடந்த 2011ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் 2013 செப்டம்பர் மாதம் முடிய 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற தொழி லாளர்களுக்கு ஓய்வுகால பணப்பலன்கள் முழுமையாக கிடைக்கவில்லை.
ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் கடும் துன்பத்திற்கு உள்ளாகி வருகின் றனர்.மேற்கண்ட சூழ்நிலையில் 2011 ஜுன் மாதம் முதல் 2013 செப்டம்பர் மாதம் முடியஓய்வுபெற்ற தொழிலாளர் களுக்கு ஓய்வூதிய தொகுப்புத் தொகை மற்றும் நிலுவைத் தொகைகளை வழங்க கடந்த 23-10-2013ம் தேதியன்று சென்னையில் தமிழக முதலமைச்சர் பங்கேற்று காசோலை வழங்கும் விழா நடைபெற்றது.இவ்விழாவில் தமிழகம் முழுவதிலுமிருந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் பங்கேற்க போக்குவரத்து கழக நிர்வாகங் கள் பேருந்து, தங்கும் வசதி, உணவு போன்ற ஏற்பாடுகளைச் செய்தன.
விழாவில் பங்கேற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய தொகுப்புத் தொகை வழங்கப்பட்டது.விழாவில் கலந்து கொண்டு நேரம் கூடுதலான நிலையில், நாளைக்கு காசோலையை கழக அலுவலகங்களில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்று விழா மேடையிலிருந்த அலுவலர்கள் கூறி அனுப்பியுள் ளனர். அவ்வாறு கழக அலு வலகங்களுக்கு சென்று கேட்டஓய்வுபெற்ற தொழிலாளர் களுக்கு காசோலை வழங் காமல் அலைக்கழித்து அனுப்பிவிட்டனர்.
விழாவில் பங்குபெற இயலாத தொழிலாளர்கள் போக்குவரத்துக் கழக தலைமையகங்களில் சென்றுஓய்வூதிய தொகுப்புத்தொகை யை கோரிய போது, விழாவில் பங்கேற்காத தொழி லாளர்களுக்கு வழங்குவது சம் பந்தமாக இதுவரை அரசு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனக்கூறி திருப்பி அனுப்பி யுள்ளனர்.ஓய்வூதியப் பலன்கள் வழங்குவது இனாமல்ல. அனைத்து பலன்களும் தொழிலாளர்களது ஓய்வூதிய காப்பகத்தில் உள்ள பணத்தில் இருந்துதான் வழங்கப்பட்டது. இது முழுவதும் தொழிலாளர் களின் பணம், மற்ற துறை ஊழி யர்களுக்கு பணி ஓய்வு பெறும் போதே ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படுகின்றன.
ஓய்வூதிய பலன்கள் காலதாமதமாக வழங்குவதே தவறானதாகும்.இந்நிலையில் அரசே விழாவில் பங்கேற்காத ஊழி யர்களுக்கு வேண்டுமென்றே காலதாமதப்படுத்தும் நோக்கத்தோடு காசோ லை வழங்க மறுப்பது எவ் விதத்திலும் நியாயமானதல்ல. அரசு மற்றும் போக்கு வரத்து கழக நிர்வாகங்களின் இந்நடவடிக்கையை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழி யர் சம்மேளனம் (சிஐடியு) வன்மையாக கண்டிக்கிறது.
உடனடியாக ஓய்வுபெற்ற தொழி லாளர்களுக்கு உரிய காசோலை மற்றும் ஓய்வூதியப் பலன்களை வழங்க வேண்டுமென தமிழக அரசையும், கழக நிர் வாகங்களையும் சம்மேளனம் கேட்டுக் கொள்கிறது.