
மின் ஒப்பந்த தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம்
தீக்கதிர் செய்தி
---------------------------
ஒப்பந்த தொழிலாளர்களின் தினக்கூலியை உயர்த்தி வழங்கிடுக
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
---------------------------
ஒப்பந்த தொழிலாளர்களின் தினக்கூலியை உயர்த்தி வழங்கிடுக
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கோவை, நவ.12-ஒப்பந்த தொழிலாளர்களின் தினக்கூலியைஉயர்த்தி வழங்கிடவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறுகோரிக்கையை வலியுறுத்தி திங்களன்று கோவை, திருப்பூரில்மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர்.
ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை விரைந்து முடித்து ஊதியஉயர்வு வழங்கிட வேண்டும், அனைத்து ஒப்பந்ததொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,பெண்கள் பணிபுரியும் இடத்தில் தனியான ஓய்வறை, கழிவறை அமைத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை டாடாபாத் மின்வாரிய அலுவலகம் முன்புசிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.செபாஸ்டியன் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் வி.மதுசூதனன், மாநில துணை பொதுச் செயலாளர்எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் எஸ்.அருள்ராஜ், சிவக்குமார், ஆர். சோமசுந்தரம், பி.ஆறுமுகம்,டி.எஸ்.சுப்பையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்
-------------------
திருப்பூர் குமார் நகர் மின்வாரிய அலுவலகம் முன்பாக செவ்வாயன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மத்திய அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.நாகராஜன் தலைமைவகித்தார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் டி.கோபாலகிருஷ்ணன், சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன், டிஎன்பிஈஓ மாநிலத்துணைத் தலைவர் பி.ஆறுமுகம், திருப்பூர் கிளைப் பொருளாளர் பி.ராமலிங்கம், இணைச் செயலாளர் ஆர்.மோகன்குமார், ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் செயலாளர் பி.இ.அச்சுதன் ஆகியோர்இதில் உரையாற்றினர். பெருந்திரளான மின் ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கம் எழுப்பினர்.
நன்றி : தீக்கதிர்
நன்றி : தீக்கதிர்