மின் வாரியத்தில் வெளியாகும் செய்திகள் உடனுக்குடன்

Sunday, December 8, 2013

மனித மாண்பு, சுயமரியாதை, அநீதிக்கு எதிரான போராட்டம்

    மனித மாண்பு, சுயமரியாதை, அநீதிக்கு எதிரான போராட்டம்

ஆகியவற்றில் உலகம் முழுவதும் உள்ள மக்களின் மீது ஈர்ப்பு செலுத்திய ஒரே தலைவராக விளங்கிய மண்டேலா அவர்களின் மறைவிற்கு   செங்கொடி தாழ்த்தி அஞ்சலி  தெரிவிக்கிறது.

அஞ்சலி


                                                                                                                                          நெல்சன் மண்டேலா மறைந்தார்

-------------------------------------------------------------- 


ஜோகன்னஸ்பர்க்டிச. 6-
தென் ஆப்பிரிக்க விடுதலையின் நாயகனும்அந்நாட்டின் முதல் ஜனாதிபதியுமான நெல்சன் மண்டேலாதென் ஆப்பிரிக்கத்தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் அவரது இல்லத்தில் வெள்ளியன்று காலமானார்.
அவருக்கு வயது (95). அவர் மறைவுச் செய்தியை அந்நாட்டின் ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா அறிவித்தார்.தொலைக்காட்சியில்பேசிய ஜூமா “தென் ஆப்பிரிக்க மக்களேநமது அன்பிற்குரிய... ஜனநாயக தென் ஆப்பிரிக்காவிற்கு வித்திட்ட அதிபர்நம்மைவிட்டு பிரிந்தார்நமது தேசம் தனது மிகப்பெரிய தலைமகனை இழந்துவிட்டதுமக்கள் தங்கள் தந்தையை இழந்துவிட்டனர்என்றார்.
மண்டேலாவின் இறுதி நிகழ்ச்சி முடியும் வரை நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப் படும் என அவர்தெரிவித்தார்.கடந்த சில மாதங்களாகவே நெல்சன் மண்டேலா உடல் நலம் குன்றியிருந்தார்அவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வந்ததுஇந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் காலமானார்.
மண்டேலாவின் மறைவிற்கு .நாசபை பொதுச் செயலாளர் பான்-கி-மூன்அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாஇந்தியகுடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மனித நேயத்தின் அடையாளம்’ : மண்டேலா மறைவை யொட்டி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட் டுள்ளஇரங்கல் குறிப்பில்மண்டேலா மனிதநேயத்தின் அடையாளமாக திகழ்ந்தார் எனத் தெரிவித்துள்ளார்பிரதமர் மன்மோகன் சிங்விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மண்டேலா உண்மை யான காந்தியவாதி என தெரி வித்துள்ளார்மேலும் அவரது இழப்புதென் ஆப்பிரிக்காவுக்கு மட்டும் அல்லஇந்தியாவுக்கும் பெரும் இழப்பாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
`சீன மக்களின் தோழர் மண்டேலா’ : மண்டேலா மறை வுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மக்கள் சீன அரசுமண்டேலா சீனமக்களின் பழம்பெரும் தோழராக விளங்கினார் எனத் தெரிவித்துள்ளதுசீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹாங்லீ கூறுகையில்சீனா-தென் ஆப்பிரிக்கா இடையேயான நட்பு வலுப்பெற மண்டேலா வரலாற்றுச் சிறப்பு மிக்க பணிகளைஆற்றியுள்ளார் என்றார்.
`ஈடு இணையற்றத் தலை வர்’: இந்த உலகம் இனி நெல் சன் மண்டேலா போன்ற ஒரு தலைவரைக் காணாது என அமெரிக்கஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார்லட்சோப லட்ச மக்களை ஊக்குவித்த ஒப்பற்ற தலைவர் மண்டேலாஅவரால்ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்அதனால்எனது முதல் அரசியல் நடவடிக்கை நிறவெறிக்கு எதிராக குரல்கொடுப்பதாகவே இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.
`உலகின் ஒளி மறைந்தது’ : பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன்இந்த உலகின் சுடர் ஒளிமறைந்து விட்டதாகக் கூறியுள்ளார்.மேலும்மண்டேலா சமகால மக்கள் மட்டும் கொண்டாடும் தலைவன் அல்லகாலத்தால் வெல்ல முடியாத தலைவன் எனத்தெரிவித்துள்ளார்.
`நீதியின் காவலர் மண்டேலா’: நெல்சன் மண்டேலாநீதியின் காவலர் என புகழா ரம் சூட்டியுள்ளது .நா சபைநிறவெறிக்குஎதிரான போராட் டத்தில் பல்வேறு தியாகங்களை செய்தவர் மண்டேலா எனவும் தெரிவித்துள்ளது.
இந்தியா 5 நாள் துக்கம் : நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
புதுதில்லிடிச. 6-
தென் ஆப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலா மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் வெள்ளியன்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.
நாடாளுமன்றம் கூடியவுடன் மக்களவையில் சபாநாயகர் மீரா குமாரும்மாநிலங்களவையில் அவைத் தலைவர் ஹமீதுஅன்சாரியும் இரங்கல் அறிக்கையை வாசித்தனர்.ஹமீது அன்சாரி இரங்கல் குறிப்பில்மண்டேலா தென் ஆப்பிரிக்காவின்தேசப்பிதாமகாத்மா காந்தியின் பாதையில் நீண்ட நெடிய பயணம் மேற்கொண்ட அவர் நிறவெறிக்கு எதிராகப் போராடினார்என்று புகழஞ்சலி செலுத்தினார்.
மண்டேலாவுக்கு இந்திய அரசு 1990-ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கியதை சுட்டிக்காட்டிப் பேசிய மக்களவைசபாநாயகர் மீரா குமார்மண்டேலா மனிதகுலத்தின் தலைவர் என்றார்பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்திபேசினர்சிபிஎம் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யாஒடுக்கப்பட்டவர்களின் தலைவர் மண்டேலா எனக்குறிப்பிட்டார்.
இதன் பின்னர் மத்திய அமைச்சரவை அவசரமாகக் கூடிமண்டேலா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதத்தில் இந்திய அரசுநாள் துக்கம் கடைபிடிப்பது என முடிவு செய்தது.