மின் வாரியத்தில் வெளியாகும் செய்திகள் உடனுக்குடன்

Saturday, December 14, 2013

மின்சார வாரிய பணியிட நிரப்பு அறிவிப்புக்கு எதிராக வழக்கு!


தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ள பணியிட நிரப்பு அறிவிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

விருதுநகர்: தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ள பணியிட நிரப்பு அறிவிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள சூரம்பட்டியைச் சேர்ந்தவர் கொடியரசு. இவர், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:
"நான், 1988 ஆம் ஆண்டு டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடித்து விட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன். இந்நிலையில், 50 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், 26.10.1987 க்கு முன்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த, ‘கட்ஆப்‘ தேதி அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்தால் தாழ்த்தப்பட்டவர்கள் யாருக்கும் வேலை கிடைக்காது. எனவே, ‘கட்ஆப்‘ தேதியை மாற்றி அறிவிக்க வேண்டும். எனக்கு ஒரு பணியிடத்தை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும்."
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் , இந்த வழக்கு சம்பந்தமாக தமிழ்நாடு மின்வாரிய தலைவர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.