மின் வாரியத்தில் வெளியாகும் செய்திகள் உடனுக்குடன்

Saturday, February 8, 2014

கூடுதல் பயனுடன் ஓய்வூதிய திட்டம்



நுகர் பொருள் வாணிப கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூடுதல் பயன்கொண்ட ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலார்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் சென்னையில் வெள்ளி யன்று (பிப்.7) பட்டினிப் போராட்டம் நடைபெற் றது.
நுகர்பொருள் கழகத் தில் காலியாக உள்ள பணி யிடங்கள் அனைத்தையும் உடனடியாக நிரப்ப வேண் டும், கணினி பிரிவு ஊழியர் கள், சுமைப் பணியாளர் கள், சமையல் எரிவாயு உருளை சுமப்போர் உள் ளிட்ட ஒப்பந்தத் தொழிலா ளர்களை எந்தவித நிபந் தனையுமின்றி பணி நிரந்த ரம் செய்ய வேண்டும், பொதுப் பிரிவு ஊழியர்க ளுக்கு வழங்குவது போல எம்.ஆர்.எம் ஊழியர்களுக் கும் ஈட்டிய விடுப்பு நாட் களை 240 நாட்களாக நிர்ண யம் செய்ய வேண்டும், விலை வாசி உயர்வுக்கு ஏற்ப சுமைப் பணியாளர்களின் கூலியை உயர்த்தி வழங்க வேண்டும், கிடங்குகளில் கூடுதல் நேரம் பணியாற்றும் ஊழியர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் படி வழங்க வேண் டும், டெல்டா மாவட்டங்க ளில் கூடுதல் நியாய விலை கடைகளை திறக்க வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத் தப்பட்டன.சங்கத்தின் மாநிலத் தலை வர் வி.குமார் தலைமை தாங்கினார்.
பொதுச் செய லாளர் இ.சண்முகவேலு பட்டினிப் போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசி னார். சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகு மாறன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.அப்புனு, வட சென்னை மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், சங்கத் தின் மாநிலப் பொருளாளர் ஆர்.புவனேஸ்வரன், எஸ். தட்சிணாமூர்த்தி, ஏழு மலை, ஜி.சிவசங்கரன் உள் ளிட்ட பலர் கோரிக்கை களை வலியுறுத்திப் பேசினர். சிஐடியு வட சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.ஜி.காசிநாதன் பட்டினிப் போராட்டத்தை முடித்து வைத்தார்.    " நன்றி தீக்கதிர் "