மின் வாரியத்தில் வெளியாகும் செய்திகள் உடனுக்குடன்

Thursday, July 3, 2014

தமிழ்நாடு மின் வாரியத்தில், 1,200க்கும் மேற்பட்டோருக்கு, தொழில் பழகுனர் (அப்ரென்டிஸ்ஷிப்) பயிற்சி


சென்னை :தமிழ்நாடு மின் வாரியத்தில், 1,200க்கும் மேற்பட்டோருக்கு, தொழில் பழகுனர் (அப்ரென்டிஸ்ஷிப்) பயிற்சி வழங்கியதற்காக, மத்திய அரசு விருது வழங்கியுள்ளது.பொறியியல் மற்றும் டிப்ளமோ பட்டம் முடித்து, சென்னை, தரமணி மத்திய தொழில் பழகுனர் வாரியத்தில், பதிவு செய்தவர்கள், மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில், ஓராண்டு பயிற்சி பெற அனுமதிக்கப்படுவர்.அதன்படி, தமிழ்நாடு மின் வாரியத்தில், 2013 14ல், 1,200க்கும் மேற்பட்டவர்கள், தொழில் பழகுனர் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த பயிற்சி, வரும், அக்டோபருடன் நிறைவுபெறும் என, தெரிகிறது.
இந்நிலையில், அதிக நபர்களுக்கு, தொழில் பழகுனர் பயிற்சி வழங்கியதற்காக, மத்திய தொழில் பழகுனர் வாரியம் சார்பில், மின் வாரியத்திற்கு, 'பெஸ்ட் எம்ப்ளாயர் அவார்டு' என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பயிற்சியின் போது, பொறியியல் பட்டதாரிகள், 3,560 ரூபாய்; டிப்ளமோ பட்டதாரிகள், 2,530 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.அவர்கள், மின் வாரியத்தில் உதவி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்படும் போது, நேர்முக தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு, அவர் கூறினார்                                                                                                                    நன்றி தினமலர்.