புதுதில்லி, பிப். 20-அனைத்து மத்திய தொழிற்சங்கங் கள், ஊழியர் சம்மேளனங்கள் அழைப்பு விடுத்திருந்த இரண்டு நாள் வேலைநிறுத்தம் புதனன்று காலை துவங்கியது. இந்தவேலைநிறுத்த அறப்போராட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இந்தப்போராட் டத்தை வெற்றிகரமாக்கிய அனைவ ருக்கும் சிஐடியு, ஏஐடியுசி, பிஎம்எஸ், ஐஎன்டியுசி, ஏஐயுடியுசி, ஏஐசிசிடியு, யுடியுசி, டியுசிசி, எஸ்இடபிள்யுஏ, தொமுச ஆகிய சங்கங்கள் வாழ்த்துக்க ளையும் நன்றியையும் தெரிவித்துள்ளன.
இந்த வேலைநிறுத்தத்திற்கு முன் னெப்போதும் இல்லாத அளவிற்கு தொழிலாளர்கள் மட்டுமின்றி பொது மக்களும் பேராதரவு நல்கினர். பெட் ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் மின்கட்டணம், பேருந்து கட்டணம் உயர்வு, அனைத்து அத்தி யாவசியப் பொருட்களின் கடும் விலை உயர்வு ஆகியவற்றினால் இந்திய மக் கள் எந்த அளவுக்கு கோபத்துடன் உள் ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாக இந்த வேலைநிறுத்தம் அமைந்தது. 2012ம் ஆண்டு செப்டம்பரில் நடை பெற்ற மாநாட்டில் பிப்ரவரி 20, 21 தேதி களில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடத்திட அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத் தன. மத்திய அரசும் மாநில அரசுகளும் கடுமையான மிரட்டல்விடுத்தபோ தும் அதையும் மீறி நாட்டையே ஸ்தம் பிக்கச் செய்யும் அளவுக்கு வேலை நிறுத்தம் முழு வெற்றிபெற்றுள்ளது.தலைநகர் தில்லி உள்பட நாட்டின் அனைத்துப் பகுதியிலும் வங்கிப் பணிகள் வேலைநிறுத்தம் காரணமாக முற்றாக முடங்கின. வேலைநிறுத்தத் தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் ஆங் காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். காப்பீட்டுத்துறையிலும் வேலை நிறுத்தம் முழுமையாக நடைபெற்றது. பெட்ரோலியம், தொலைதொடர்பு, சுரங்கம், நிலக்கரி, பாதுகாப்புத்துறை, அணுசக்தி உள்ளிட்ட மின்துறை, மத்திய-மாநில அரசு ஊழியர்கள், அஞ்சல் துறை ஊழியர்கள், வருமான வரித்துறை ஊழியர்கள் முழு அளவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். வருமானவரி மற்றும் அஞ்சல் சேவை யும் பாதிக்கப்பட்டது.
நாடு முழுவது முள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஊழியர்கள் வேலைநிறுத்தத் தில் ஈடுபட்டனர். ரயில், பேருந்து, ஆட்டோ என போக்குவரத்துத் தொழிலாளர்களும் பெருமளவு வேலைநிறுத்தத்தில் ஈடு பட்டனர். இதனால் நாட்டின் பெரும் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. முறைசாரா தொழிலாளர்கள், அங்கன்வாடி தொழிலாளர்கள் லட் சக்கணக்கானோர் வேலைநிறுத்தத் தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் லட் சக்கணக்கான விவசாயத் தொழிலாளர் களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற் றனர்.அருணாச்சலபிரதேசம் துவங்கி குஜராத் வரை, காஷ்மீர் துவங்கி கன் னியாகுமரி வரை நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடைபெற்றது. அசாம், பீகார், ஒடிசா, பஞ்சாப், ஹரி யானா, ராஜஸ்தான், கேரளம், ஆந்தி ரம், தமிழ்நாடு, கர்நாடகம் என அனைத்து மாநிலங்களிலும் வேலை நிறுத்தம் முழுமையாக நடைபெற்றது. கேரளம் மற்றும் திரிபுராவில் கடைகள், பள்ளிகள் அடைக்கப்பட் டிருந்தன. வேலைநிறுத்தம் இந்த மாநி லங்களில் பந்த் போராட்டமாக மாறியது.கேரளத்தில் இயல்பு வாழ்க்கை முற் றாக ஸ்தம்பித்தது. தனியார் பேருந் துகள் உள்பட பேருந்துகள் ஓடவில்லை. ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மேற்குவங்கத்தில் மம்தா அரசின் மிரட்டல்களை மீறி தொழிலாளர்கள் பெரும் எழுச்சியுடன் வேலைநிறுத்தத் தில் பங்கேற்றனர். 10 அம்சக்கோரிக்கைளை முன் வைத்து நடைபெற்ற வேலைநிறுத்தத் தை வெற்றிகரமாக்கிய தொழிலாளர் கள் ஆதரவளித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக மத்திய தொழிற் சங்கங்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளன.வேலைநிறுத்தம் வியாழனன்றும் முழுமையாக நடைபெற உள்ளது. இந்திய வரலாற்றில் தொடர்ச்சியாக இருநாட்கள் முழுமையாக வேலை நிறுத்தம் நடைபெறுவது முன்னெப் போதும் நடந்திராத ஒன்றாகும்.
மூன்று தொழிலாளர்கள் படுகொலை
புதனன்று நடைபெற்ற வேலைநிறுத்தத்தின் போது அரியானா மாநிலம் அம்பாலாவில் ஒருவரும் உ.பி. மாநிலம் நொய்டாவில் இருவரும் என மூன்று தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அரியானா மாநிலத்தில் பேருந்து பணி மனை முன்பு மறியல் செய்ய முயன்ற ஏஐடியுசி தலைவரும் பேருந்து ஓட்டுநருமான நரேந்திர சிங் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.நொய்டாவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது போலீசார் நடத்திய கொடூரத்தாக்குதலில் இரண்டு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலைகளை மத்திய தொழிற்சங்கங்கள் வன்மையாகக் கண்டித்துள்ளன. தொழிலாளர்கள் கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. தில்லி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது.