மின் வாரியத்தில் வெளியாகும் செய்திகள் உடனுக்குடன்

Thursday, February 21, 2013

தமிழகத்தில் வேலைநிறுத்தம் மாபெரும் வெற்றி


சென்னை, பிப். 20-மத்திய அரசின் நாசகர பொருளாதார கொள்கை களை கண்டித்து 11 மத்திய தொழிற்சங்கங்களும், தொழில் வாரி சம்மேளனங்களும், துறைவாரி சங்கங்களும் இணைந்து பிப்ரவரி 20-21 தேதிகளில் தேசந்தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அறை கூவல் விடுத்தன. இதனை யொட்டி பிப்ரவரி 20 அன்று தமிழகத்தின் மத்திய -மாநில பொதுத்துறைகளி லும், கேந்திரமான துறை களிலும், மிகப்பெரும் தனி யார் நிறுவனங்களிலும், பாரம்பரியமிக்க தொழில் களிலும் வேலைநிறுத்தப் போராட்டம் பெரும் வெற்றி பெற்றுள்ளது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு தாரை வார்க் கக் கூடாது, முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு, நிரந்தர தன் மைவாய்ந்த பணிகளில் ஒப் பந்த முறை கூடாது, சம வேலைக்கு சம ஊதியம், குறைந்தபட்ச ஊதியம் ரூ.10 ஆயிரம் போனஸ் உச்சவரம் பை அகற்ற வேண்டும், மூன் றாவது பயனாக ஓய்வூதியம், பணிக்கொடை சட்டத்தில் திருத்தம், தொழிற்சங்க உரிமை, தொழிற்சங்க அங்கீ காரம் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ கம் முழுவதும் வேலை நிறுத்த ஆயத்த மாநாடுகள், வாயிற்கூட்டங்கள், தெரு முனை பிரச்சாரங்கள், பேர வைக் கூட்டங்கள் என தயா ரிப்புப் பணிகள் முழுமை யாக நடைபெற்றன. இறுதியாக பிப்ரவரி 20 அன்று நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் மத்திய பொதுத்துறை நிறு வனமான திருச்சி -ராணிப்பேட்டை பிஎச்இ எல், வெடிமருந்து தொழிற் சாலைகள், என்எல்சி, ஊட்டி போட்டோ பிலிம், மணல் தொழிற்சாலை, சேலம் ஸ்டீல், கல்பாக்கம் அணு மின் நிலையம், ஆவடி டேங்க் பாக்டரி, துப்பாக்கி தொழிற்சாலை, நாகை ஒஎன் ஜிசி, ஐஒசி, பிபிசி, பாதுகாப்பு தொழிற்சாலை (சென்னை), கேஸ் சிலிண்டர் லாரி ஓட் டுநர்கள், என்டிசி மில்கள் மற்றும் ஷோரூம்கள், துத் துக்குடி மற்றும் சென்னை துறைமுகம் உள்ளிட்ட மத் திய பொதுத்துறைகளில் வேலைநிறுத்தம் முழு வெற்றி பெற்றுள்ளது. போராட்டம்; பிப்ரவரி 21 அன்றும் தொ டர்கிறது.மாநில பொதுத்துறைக ளான மின்சாரத்தில் 70 சத வீதமும், போக்குவரத்தில் 50 சதவீதமும், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தில் 2200 பேரும், கூட்டுறவு-பொதுத்துறை சர்க்கரை ஆலைகளிலும், அங்கன் வாடி ஊழியர்கள் முழுமை யாகவும், அரசு ரப்பர் கழகத் திலும், 15க்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிற் சாலைகளிலும், தமிழ்நாடு கனிம நிறுவனத்திலும், கூட் டுறவு நிறுவனங்க ளிலும் , ஆவின், கூட்டுறவு பஞ்சா லைகளிலும் போன்ற மாநில பொதுத்துறைகளிலும் வேலை நிறுத்தம் நடை பெற்றுள்ளது.மிகப் பெரிய தொழிற் சாலைகளான சென்னை-ஒசூர் அசோக் லேலாண்டி லும், ஏசிசில், சிம்சன், ஐஒ சிஎல், டேப்லெட்(வட சென்னை), டிடிகே,ஈசன் ரீரோல்(கிருஷ்ணகிரி), இந் தியா பர்னீச்சர், லான்சர் (திருவள்ளூர்), எல்அண்டி (காஞ்சிபுரம்) கடலுர் சிப் காட், புதுவை சிப்காட், டால்மியா சிமெண்ட், கோத் தாரி சர்க்கரை ஆலை, கா வேரி சர்க்கரை ஆலை (திருச்சி), இந்தியா சிமெண்ட் (தாழையூத்து), ஐந்து பஞ்சா லைகள்(சேலம்) கேஎல்எம் கோவை இன்ஜினியரிங் தொழிற்சாலைகளான பிரிக் கால், டெக்ஸ்மோ மற்றும் தொழிற்பேட்டை, நெய்சர் (கடலுர்) நாகம்மாள் மில் (குமரி) ஊட்டி பயோடெக் போன்ற தொழிற்சாலை களிலும் பாரம்பரியமிக்க தொழில்களான பீடித் தொழிலில் வேலூர் மாவட் டத்தில் 30,000பேரும், நெல் லையில் 15,000 பேரும் , கன் னியாகுமரி முந்திரி தொழி லில் 1 லட்சம் பேரும், நீல கிரி தோட்டத் தொழி லாளர்கள் 50,000 பேரும், திருப்பூரில் பனியன் தொழி லில் மட்டும் 2லட்சம் பே ரும், திண்டுக்கல் தோல் தொழிலில் 2000 பேரும், நகராட்சி-பேரூராட்சி- உள் ளாட்சி தொழிலில் பணி யாற்றக்கூடிய 5000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர் களும், அப்பளத்தொழிலா ளர்களும் பெருமளவில் பங் கேற்றுள்ளனர்.
இதுதவிர, ஆட்டோ ஓட்டுநர்கள் தமிழகம் ழுழு வதும் 60,000 தொழிலா ளர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். மற்றும் கைத்தறி, சுமை, கட்டுமா னம், பாத்திரம், வீட்டு வேலை, தையல், சாலை யோரம் போன்ற முறை சாரா தொழிலாளர்கள் பெருமளவில் போராட்டத் தில் ஈடுபட்டுள்ளனர். வேலைநிறுத்தப் போராட் டத்தையொட்டி தமிழகத் தில் 50க்கும் மேற்பட்ட மை யங்களில் 60,000 பேர் வரை பங்கேற்ற ஊர்வலம்-ஆர்ப் பாட்டம் நடைபெற்றுள் ளன.