சென்னை, அக்.2- தமிழகத் தில் சோலார் மின்சாரத்தை கொண்டுவர முதல்முறையாக 3 இடங்களில் தலா 400 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையங்களை அமைக்க தமிழ் நாடு மின் தொடரமைப்பு கழகம் திட்டமிட்டுள்ளது.
சூரிய ஒளி சக்தி மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் 3,000 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று தமிழக அரசு கடந்த 2012ஆம் ஆண்டு அறி வித்தது. அதன்படி, சிறிய நிறுவனங்கள் சோலார் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். அதேபோல், பொது மக்கள் தங்களின் தேவைக்கு வீட்டின் கூரைகளில் சோலார் கருவிகள் பொருத்தி மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.
இதுவரை 698 மெகாவாட் அளவுக்கு சோலார் மின்சாரம் உற்பத்தி செய்ய நிறுவனங்கள் டெண்டர் மூலம் இறுதி செய்யப் பட்டுள்ளது. இதில் தென் மாவட்டங் களில் மட்டும் சுமார் 448 மெகா வாட் அள வுக்கு மின் சாரம் உற்பத்தி செய்யவுள்ளது.
குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 299 மெகா வாட் உற்பத்தி செய் யப்படவுள்ளது.
இந்நிலையில், சோலார் மின் சாரத்தை சீராக பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் தூத்துக் குடி மாவட்டம், சிவகங்கை ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் தலா 400 கிலோவாட் திறன் கொண்ட 3 துணை மின்நிலையங்கள் அமைக் கப்பட்டு நாகப்பட்டினத்தில் உள்ள 765 கிலோ வாட் திறன் கொண்ட துணை நிலையத்தில் இணைக்க தமிழக மின் தொடர மைப்பு கழகம் முடிவு செய் துள்ளது. சோலார் மின்திட்டத்திற்காக முதல்முறையாக அமைக்கப்படும் துணை மின்நிலையங்கள் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.