
திருவண்ணாமலையில் டி.கே.ரங்கராஜன் எம்.பி. பேச்சு
புதிய ஓய்வூதிய திட்டம் என்ற பெயரில் ஓய்வூதியத் திற்கு ஓய்வு கொடுத்ததே அரசின் சாதனை என சிஐ டியு தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பின ருமான டி.கே.ரங்கராஜன் எம்.பி. கூறினார். தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப் பின் மாநில பொதுக் குழு கூட்டம் சனிக்கிழமை அன்று (செப்.21) திருவண்ணாமலை யில் துவங்கியது.
கூட்டத் திற்கு எம்.சின்னசாமி தலைமை தாங்கினார். துணை பொதுச் செயலாளர் கிருஷ்ண பிள்ளை கொடியேற்றி வைத்தார். பாலகிருஷ்ணன் அஞ்சலி தீர்மானம் வாசித் தார். வரவேற்பு குழுவின் தலைவர் வே.மன்னார் வர வேற்றார். இதில் டி.கே.ரங்க ராஜன் பேசியதாவது:-2004ஆம் ஆண்டுக்கு பிறகு அமல்படுத்தப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டத்தி னால் அரசு ஊழியர்களுக்கு கிடைத்து வந்த ஓய்வூதியம் கேள்விக்குறியாகியுள்ளது. அந்த பணத்தை பங்குச் சந் தையிலும் யூக வணிகத்திலும் அரசு பயன்படுத்தி வருகி றது.
பொருளாதார நெருக் கடிகளின்போது முதலீடு கள் நஷ்டமாகிவிட்டால் பாதிக்கப்படுவது ஓய்வூதியர் கள்தான். நாட்டில் 90 சதவீத மக்கள் எந்த சலுகையும் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். 7 சதவீதம் பேருக்கு மட்டுமே சலுகை கிடைக்கிறது. இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் புதிய ஒய்வூதிய திட்டத்தை 99 சத வீத கட்சிகள் ஆதரிக்கின் றன. பல்வேறு கட்சிகளின் தொழிற்சங்கங்கள் இத் திட்டத்தை எதிர்க்கின்றன.
ஆனால் அவை சார்ந்துள்ள அரசியல் கட்சிகள் அதை ஆதரிக்கின்றன.தொழிலாளிகளின் எதிர் கால வாழ்வை சீரழிக்கும் அரசியல்வாதிகளை அந்த கட்சிகளின் தொழிற்சங் கத்தினர் சகித்துக் கொண்டு உள்ளனர். இந்நிலையில் தொழிலாளி வர்க்க ஒற்று மையை ஏற்படுத்த நாம் முயற்சி செய்ய வேண்டும். உழைப்பாளி மக்களை ஒன்று திரட்ட வேண்டும். இன்று தொழிலாளர்கள் நிரந்தரமான வேலையில் லாமல் தொகுப்பூதியம் அடிப்படையில் பணிபுரி கின்றனர். அதனால் ஏராள மான முறைசாரா தொழி லாளர்களை ஒன்றிணைக்க வேண்டும்.
புதிய பொருளாதார கொள்கைகள் அமல்படுத் தப்பட்ட 50 ஆண்டுகளுக் குப்பிறகு ஒருபுறம் நாடு வளர்ந்துள்ளது. விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி என்பது புதிய மத்திய தர வர்க்கத்தை உருவாக்கியுள் ளது. முதலாளிகள் சர்வதேச முதலாளிகளாக மாறியுள் ளனர். விதவிதமான கார்கள், வகைவகையான செல்போன் கள் முளைத்துள்ளன. இத் தகைய வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும் 53 சதவீத மக்களுக்கு கழிப்பிடம் இல்லை.
மக்களின் அடிப்படை தேவையான குடிநீர், காற்று மாசு அடைந்துள்ளது. ஆண் பெண் விகிதாச்சாரத்தில் வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தேசத்தில் நதிகளும் தெய் வங்களும் பெண் பெயரில் இருந்தாலும் பெண் குழந் தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. இத் தகைய சூழ்நிலைகளை மாற்ற நாம் முயற்சி எடுக்க வேண் டும்.இவ்வாறு அவர் பேசி னார். பின்னர் பொதுச் செய லாளர் அறிக்கையை எஸ். ஜெகதீசன் வாசித்தார். நிநி நிலை அறிக்கையை ஆர். ராமநாதன் வாசித்தார். மின் ஊழியர் மத்திய அமைப் பின் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க தலைவர் என்.எல்.ஸ்ரீதரன், ஓய்வுபெற்ற பள்ளிக் கல் லூரி ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் கிருஷ்ணசாமி, அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பொதுச் செயலாளர் கே. கர்சன், சிஐடியு மாவட்ட தலைவர் சி.அப்பாசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
“சுற்றும் பூமியின் சுழ லும் ஆபத்து ’’என்ற தலைப் பில் வெ.மன்னார் “இந்திய அரசியலில் எதிர்கால திசைவழி’’ என்ற தலைப்பில் என்.எல்.ஸ்ரீதரன், “புதிய ஓய் வூதியம் தொங்கும் கத்தி’’ என்ற தலைப்பில் எஸ். ஜெகதீசன் ஆகியோர் பேசி னர். முன்னதாக அண்ணா சிலை அருகிலிருந்து நடை பெற்ற பேரணியில் ஏராள மான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.