மின் வாரியத்தில் வெளியாகும் செய்திகள் உடனுக்குடன்

Saturday, November 23, 2013

ஊதிய உயர்வு வழங்க கோரி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஊதிய உயர்வு வழங்க கோரி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ஊதிய உயர்வு வழங்க கோரி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்:தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மின் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் மின்மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட தலைவர் சேகர் தலைமை தாங்கினார். வட்ட நிர்வாகிகள் ஏழுமலை, அர்ச்சுணன், குணசேகர் முன்னிலை வகித்தனர்.
மாநில செயலாளர் அம்பிகாபதி, திட்ட பொருளாளர் பாஸ்கர் கண்டன உரையாற்றினர். மின்வாரிய ஊழியர்களுக்கு கடந்த 2011ம் ஆண்டு டிச., 1ம் தேதி முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு உடன் வழங்க வேண்டும்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக பணியாற்றிய கணக்கீட்டாளர் 2ம் நிலை ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல், பகுதி நேர பணியாளர்களுக்கு கடந்த 2006ம் ஆண்டு செப்., 1ம் தேதி முதல் அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினர். கோட்ட செயற்குழு உறுப்பினர் சாமிநாதன் நன்றி கூறினார்.