மின் வாரியத்தில் வெளியாகும் செய்திகள் உடனுக்குடன்

Saturday, November 23, 2013

மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம் 

மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ஊட்டி : மின் ஊழியர் மத்திய அமைப்பு, நீலகிரி கிளை (சி.ஐ.டி.யு.,)சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊட்டி, கூடலூர் மின்வாரிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஊதிய உயர்வு, மின் வாரிய பிரிப்பு அமலாக்கத்தை மறுபரிசீலனை செய்தல்; கணக்கீட்டாளர் 2 நிலையை கணக்கீட்டாளராக பதவி உயர்வு, 10 ஆயிரத்து 500 மஸ்தூர்களுக்கு கள உதவியாளர் பதவி வழங்குதல்; அடுத்த பதவி 5 ஆண்டுகள் என்பதை ரத்து செய்தல் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப் பட்டன.
ஊட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு துணை தலைவர் ரவிசண்முகம் தலைமை வகித்தார். 
ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் வினோத் பேசினார். 
கோரிக்கைகளை விளக்கி கிளை செயலாளர் சண்முகம், ஊட்டிகோட்ட செயலாளர் வேல்முருகன் உட்பட பலர் பேசினர்.
கூடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் பொன்னு தலைமை வகித்தார். 
காட்பிரே மேத்யூ, குன்னூர் கோட்ட செயலாளர் ரமேஷ், நிர்வாகிகள் கணேஷ்மூர்த்தி, சகாயநாதன், ஜான்காலின்ஸ், அரவிந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.