

1940ல் கோழிக்கோடு கல்லூரியில் இன்டர்மீடியட் தேர்வில் வெற்றி பெற்ற பிறகு பொருளாதாரத்தில் ‘ஆனர்ஸ்’ படிப்பிற்காக அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அப்போது அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் செயல்பட்டு வந்த கம்யூனிஸ்ட் குழுவோடு இணைந்து பணியாற்றத் துவங்கினார்.
அன்று முதல் இன்று வரைக்கும் நீண்டகாலம் கட்சிப் பணிகளில் அளப்பரிய பெருமையை தோழர் உமாநாத் சேர்த்துள்ளார்.அடக்குமுறை காலங்களில் கொலைவழக்கு, சதிவழக்கு என பல வழக்குகளை உமாநாத் சந்தித்துள் ளார். ஒன்பதரை ஆண்டுகள் சிறை வாழ்க்கை, ஏழு ஆண்டுகள் தலைமறைவு அரசியல்பணி என வீரம்செறிந்த, அர்ப்பணிப்புமிக்க, அப்பழுக்கற்ற பொதுவாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்கு பவர் தோழர் உமாநாத்.
அவர் தலைமையேற்று நடத்திய தொழிலாளர் போராட்டங்கள் எண் ணற்றவை. நாடாளுமன்ற உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக திறம்பட பணியாற்றியுள்ளார். தற்போது திருச்சியில் அவரது மகள் நிர்மலாராணி - ராஜ்குமார் வீட்டில் தோழர் உமாநாத் வசித்து வருகிறார்.