

ஓய்வூதியர் தினத்தை முன் னிட்டு, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஒய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தஞ்சாவூ ரில் சிறப்புக் கருத்தரங்கம் நடை பெற்றது. கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் இர.கலியமூர்த்தி தலைமை வகித்தார்.
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் நல அமைப்பின் மாவட்டச் செயலா ளர் து.கோவிந்தராஜு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக நிர்வாகி எஸ்.ஞானசேகரன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு பள்ளி- கல்லூரி ஓய்வூதியர் கூட்டமைப்பின் மாவட் டச் செயலாளர் ஆழி. இராம. அரங்கராசன் வரவேற்றார். கூட்டமைப்பின் மாவட்டச் செய லாளர் ஆர்.இராஜகோபால், மின்வாரிய ஓய்வூதியர் நல அமைப் பின் மாவட்டத்தலைவர் கே.ஆர். ஜோதிராமன், பள்ளி- கல்லூரி ஓய்வூதியர் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் சோலை தட்சிணாமூர்த்தி, அரசுப் போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் ஏ.சி. தூயமணி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர்.மனோகரன், காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செய லாளர் ந.குருசாமி, தொலைத் தொடர்புத்துறை ஓய்வு பெற்றோர் அமைப்பின் ஜி.கே.சௌந்தராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். “முதுமைசாபம் அல்ல; வரம்!” என்ற தலைப்பில், கவிஞர் நா.முத்துநிலவன், “ ஓய்வூதியர் - நேற்று - இன்று - நாளை” என்ற தலைப்பில், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் தி.கண்ணன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.
கூட்டமைப்பின் மாநிலச்செயலாளர் எம்.தங்கமணி நிறைவுரை வழங்கினார். வட்டத் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியம் நன்றி கூறினார். கருத்தரங்க நிறைவில் 75 வயதிற்கு மேற்பட்ட ஓய்வூதியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.