

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார் பில் ஓய்வூதியர் தின சிறப்புக் கூட்டம், திருச்சி ராஜா ஓட்டலில் செவ் வாயன்று மாலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஓய்வூதியர் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் செந்தமிழ்ச் செல்வன் தலைமை வகித் தார். மாவட்டத் தலைவர் சிராஜூதீன், பள்ளி-கல்லூரி ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்க மாநிலச் செயலாளர் ஆதிகுருசாமி, போக்கு வரத்து கழக ஓய்வூதியர் நல அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் கிருஷ்ணசாமி, மின்வாரிய ஓய்வுப் பெற்றோர் நல அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் பஷீர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மத்திய-மாநில பொதுத் துறை ஓய்வூதியர் சங்க மாநி லத் தலைவர் நெ.இல.சீதரன் சிறப் புரையாற்றினார்.புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண் டும்; சத்துணவு, அங்கன் வாடிஊழியர்கள் ஆகியோருக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வுப்பெற்றோருக்கு இலவச மருத்துவம், பஸ்பாஸ் வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
75வயது பூர்த்தியான ஓய்வூதியர் 12 பேருக்கு மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன் சால் வை அணிவித்து கௌரவித் தார்.
முன்னதாக தமிழ்நாடு பொருளாளர் முருகேசன் வரவேற்றார். கிருஷ்ண மூர்த்தி நன்றி கூறினார்.