மின் வாரியத்தில் வெளியாகும் செய்திகள் உடனுக்குடன்

Wednesday, January 1, 2014

மின் ஊழியர் சங்க வாயிற்கூட்டம் : ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை பற்றி விளக்கம்

மின் ஊழியர் சங்க வாயிற்கூட்டம் : ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை பற்றி விளக்கம்
திருவாரூர், டிச. 31 -
மின் ஊழியர் களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை குறித்த விளக்கக் கூட்டம் திரு வாரூர் செயற்பொறியாளர் அலு வலகம் முன்பு நடைபெற்றது.தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் நாகை, திருவாரூர், மின்வட்ட கிளையின் சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கிளைத் தலைவர் எஸ்.சிவராஜன் தலைமை வகித்தார்.
மின்வாரியத்தின் செயல்பாடுகள்,மின் தட்டுப்பாடு குறித்த அரசின் கொள்கைகள், ஊழியர்களின் சம்பள விகிதத்தின் வித்தியாசங்களை சரிசெய்வதற்காக சங்கம்எடுத்து வரும் தொடர் நடவடிக் கைகள் ஆகியவை குறித்துது.கோவிந்தராஜன் உரையாற்றினார். கிளைச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன், மின்வாரிய ஓய்வு பெற்றோர் அமைப்பின்நிர்வாகி ஜி.குமார், சங்க நிர்வாகி கள் வி.சுப்பிரமணியன், எஸ்.சகாயராஜ், ஏ.ரமணி, எம்.கலைச்செல்வன், ஆர்.விஜயா உள்ளிட்டோர் பேசினர்.கிளைப் பொருளாளர் கே.முரளிதரன் நன்றி கூறினார்.