மின் வாரியத்தில் வெளியாகும் செய்திகள் உடனுக்குடன்

Monday, February 3, 2014

பணி ஓய்வு பாராட்டு விழா


 பிப். 1 -
பாபநாசம் நகர மின்சார வாரிய வருவாய் மேற்பார்வையாளர் சி.கணேசன் பணி ஓய்வுபெற்றதை யொட்டி அவருக்கு, தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில்பாராட்டு விழா நடை பெற்றது.
அமைப்பின் மாவட்டச் செயலாளர் எஸ்.ராஜாராமன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் டி.கோவிந்தராஜன், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பி.எம்.காதர்உசேன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.இதில் குடந்தை செயற்பொறியாளர் த.சங்கரன், பாபநாசம் உதவி செயற் பொறியாளர் மணிமுத்து,பாபநாசம் உதவி பொறியாளர் எஸ்.வெங்கட்ராமன், குடந்தை உதவிக் கணக்கு அலுவலர் டி.தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சி.கணேசன் ஏற்புரையாற்றினார்.பின்னர் தீக்கதிர் நாளிதழுக்கு ஆண்டுச் சந்தா, ஒளிக்கதிர், மின்கதிர் மற்றும் சிஐடியு-வுக்கு வளர்ச்சி நிதி என ரூ. 6 ஆயிரத்து 700 வழங்கினார்.