மின் வாரியத்தில் வெளியாகும் செய்திகள் உடனுக்குடன்

Tuesday, February 4, 2014

தேசிய மின்தொகுப்பில் தமிழகம் கே.விஜயன்



 ஜனவரி மாதம் 2014 முதல் தென் னிந்திய மின் மண்டலம் தேசிய மின் மண்டலத்துடன் இணைவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டாகிவிட்டது. தென் மண்டலத்தை இணைக்கும் மின்பாதை ரெய்ச்சூர் முதல் சோலாப்பூர் வரையிலான 785 கி.மீ. நீளமுள்ளது. மார்ச்மாதத்தில் நடைமுறைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மின்தட்டுப்பாடு தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் வெளியிலிருந்து மின்சாரம் வாங்க முடியாத நிலை உள்ளது என்றும் இதற்கு காரணம் மத்திய அரசு உரிய நேரத்தில் தேசிய மின்பாதையோடு இணைத்து இருக்குமானால் மின்சாரத்தை தமிழக மக்களுக்கு என்ன விலை கொடுத்தாவது வாங்கி வந்து சேர்த்திருப்போம் என்று சொல்பவர்களுக்கு ஆறுதலான விஷயம்.சாலை மூலம் ரயில் மூலம் இந்தியாவை இணைத்தாகிவிட்டது.
இப்பொழுது மின் சாரத்தின் மூலம் இந்தியாவை இணைத்தது பெருமைக்குரிய விஷயம் என்று பலரும் பேசுகின்றனர். இதில் ஒரு முக்கியமான பொருள் அடங்கியிருக்கிறது. அது என்ன? இந்தியாவில் ஏற்றத்தாழ்வான வளர்ச்சி உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கின்றனர். அதிகமாக மின்சாரம் உள்ள மாநிலத்தி லிருந்து மின்பற்றாக்குறை உள்ள இடத் திற்கு கொண்டுவரவேண்டும் என்பதற்காக போடப்பட்ட மின்பாதை,தேசிய மின்தொகுப்பு டன் இணைக்கப்பட்டதால் தரமான மின் சாரத்திற்கான அலைவரிசை எண் 49,7ழணஐ பராமரித்தல் அவசியமாகும். இதில் கூடவோ குறையவோ செய்யக்கூடாது.அவ்வாறு ஏதேனும் தவறு ஏற்பட்டால் 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்ட மின்தடை, இந்தியாவின் 60 கோடி மக்கள் மின்சாரம் இல்லாமல் இரண்டு நாள் தவித்தது ஒரு உதாரணம்.ஆகவே மாநிலங்கள் மின்சாரம் பயன்படுத்துவதில் ஒழுக்கம் இல்லை என்றால் அதற்கான தண்டனையோடு கூடிய வழிகாட்டுதலும் உருவாக்கப்பட்டுள்ளது.மின்சாரத்தை ஒரு இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கான காரணங்கள் இருக்க வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் சில குறிப்பாக இத்தாலி நாட்டில் பெருமளவில் மின்சாரம் இறக்குமதி செய்யப்படுகிறது. அந்நாட்டிற்கு தேவையான மின்சாரத்தை அருகில் உள்ள பிரான்ஸ் நாடுதான் அதிகமாக வழங்கிக்கொண்டிருக்கிறது.